டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்.. இனிமேல் இந்த கட்டுப்பாடு கிடையாது.. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
ரயில்வே அமைப்பு மக்களுக்குப் பயனுள்ள வகையில் புதிய சேவைகளைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்த ரயில்வே அமைப்பு கொண்டு வரும் ஒவ்வொரு புதிய சேவைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் எடுக்கும் யூடிஎஸ் செயலியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் நடைமேடை, ரயில் டிக்கெட்டுகளை எளிதில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்குப் பயணிகள் வரேவுற்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது யூடிஎஸ் செயலி (UTS App) மூலம் பிளாட்பாம் டிக்கெட், மின்சார ரயில் டிக்கெட், மாதாந்திர டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட் ஆகியவற்றை உடனடியாக பெறமுடியும். குறிப்பாக ரயில்வே அமைப்பு மையத்தினால் உருவாக்கப்பட்ட இந்த ஆப் நாம் பயன்படுத்தும் ஜிபிஎஸ் தகவல் அடிப்படையில் செயல்படுகிறது.
எனவே இந்த ஆப் வசதியை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதாவது இந்த யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால், ரயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவிலும் மற்றும் 2 கி.மீ தொலைவு உள்ளேயும் இருக்க வேண்டும். இதனால் டிக்கெட் எடுப்பதில் பலருக்கும் சிரமம் ஏற்பட்டது.

இதுகுறித்து நீண்ட நாட்களாக யுடிஎஸ் செயலி உபயோகப்படுத்தும் பயனாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில், இந்த முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ரயில்வே அமைப்பு. அதாவது இனிமேல் யூடிஎஸ் செயலி வாயிலாக ரயில் நிலையத்தின் அருகே அல்லது வீட்டில் இருந்தே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் டிக்கெட் எடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்து விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்தின் உள்ளே இருந்து மட்டும் டிக்கெட் எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியது என்னவென்றால், வெளிப்பகுதியில் யூடிஎஸ் செயலி வாயிலாக புறநகர் ரயில் டிக்கெட் பதிவு செய்வதில் ஜியோ-ஃபென்சிங் (Geo-Fencing) கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் தற்போது இந்த கட்டுப்பாடுகளை ரயில்வே நீக்கியுள்ளது. இதன் வாயிலாக முன்பதிவில்லாத டிக்கெட் புறநகர் ரயில் டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் ஆகியவற்றைச் செயலி வாயிலாக வீட்டில் இருந்தபடியே எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, தேர்தலுக்குப் பிறகு இந்திய இந்திய ரயில்வே துறையில் (Indian Railways) மற்றும் அதன் இரயில் டிக்கெட்(Train Ticket) சேவையில் புதிய மாற்றங்கள் (New Changes) கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ரயில்வே துறையானது புதிய ரீஃபண்ட் திட்டத்தை (Refund Scheme) கொண்டுவரவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெறும் 24 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரீஃபண்ட் தொகை திரும்பிக் கொடுக்கப்படும். அதாவது ரயில் டிக்கெட் ரத்து செய்யப்படும் பட்சத்தில் 24 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறமுடியும் என்று கூறப்படுகிறது. ரயில்வே துறையில் தற்போது இருக்கும் டிக்கெட் ரீஃபண்ட் செயல்முறையானது 3 நாட்கள் முதல் 1 வாரம் கழித்தே தொகையைத் திருப்பிக் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, டிக்கெட்டை கேன்சல் செய்வது, ரயில் எங்கே இருக்கிறது என்பதைக் கண்காணிக்கும் லைவ் ட்ரெயின் ட்ராக்கிங் (Live train tracking) மற்றும் இரயில் பயணத்தின் போது உணவுகளை புக்கிங் (Food bookings onboard) செய்வது போன்ற அனைத்து சேவைகளையும் வழங்கும் ஒரு விரிவான சூப்பர் ஆப்பை (Super App) இந்திய ரயில்வே துறை வெளியிட உள்ளது.


Click it and Unblock the Notifications








