ரயில் பயணிகளுக்கு நற்செய்தி: விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி.!
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மக்களுக்குத் தேவையான அனைத்து முக்கிய அம்சங்களும் வாட்ஸ்அப் செயலியில் உள்ளது. எனவே தான் டெலிகிராம் செயலியை விட இந்த வாட்ஸ்அப் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் தற்போது பல்வேறு புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ரயில் பயணிகள் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி விரைவில் அமலாக உள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான தகவல்களை இப்போது பார்ப்போம்.

ஐஆர்சிடிசி நிறுவனம்
அதாவது ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் உணவுகளைத் தயார் செய்து வழங்கி வருகிறது. இதற்கு வேண்டித் தனி இணையதளம் மற்றும் மொபைல் செயலி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வாட்ஸ்அப் மூலமும் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்கிறது. பின்பு இதை இரு கட்டங்களாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சில குறிப்பிட்ட வழித்தடங்களில் ஏற்கனவே இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் தொடர்ச்சியாக அனைத்து தடங்களிலும் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி விரைவில் அமல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை?

மேலும் இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்களில் இ-கேட்டரிங் சேவைகளுக்கான வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்பு வாடிக்கையாளர்கள் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மற்ற ரயில்களிலும் இது அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வசதி பல்வேறு மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் புது அப்டேட்
அதேபோல் சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அசத்தலான அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இதுவரை புகைப்படங்கள், வீடியோக்கள், டெக்ஸ்ட்கள் மட்டுமே வைக்கும் வசதி இருந்த நிலையில், இனி உங்கள் குரலை வைத்து வாய்ஸ் நோட்ஸ்ஸையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, ஆண்ட்ராய்டு 2.23.2.8 க்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கும் என்று WABetaInfo தளம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த புதிய வசதியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், டைப் செய்யும் கீபோர்டு அருகே இருக்கும் மைக்கை டேப் செய்து, குரல் பதிவுகளை ரெக்கார்டு செய்ய வேண்டும். பின்பு நீங்கள் ரெக்கார்டு செய்ததை எடுத்து ஸ்டேட்டஸாக பகிர்ந்து கொள்ளலாம். மேலும் ஆரம்பத்தில் குரல் பதிவிற்கான அதிகபட்ச பதிவு நேரம் 30 வினாடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் குரல் பதிவிற்கான நேரம் அதிகப்படுத்தப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களைப் போலவே, குரல் பதிவுகளும் 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








