புதிய டிவைஸ் அறிமுகம்.. Rail இல் டிக்கெட் புக் செய்தாலே பெர்த் உறுதி.. இனி இதை பண்ணுங்க!

|

ரயில்வே புதிய கையடக்க டெர்மினல் (HHTs)ஐ அறிமுகம் செய்துள்ளது. இது கணினி மயமாக்கப்பட்ட ஆன்-போர்ட் டிக்கெட் சரிபார்ப்பு கருவியாகும். இதன்மூலம் நிகழ்நேரத்தில் காலியான இருக்கைகளை கண்டறிய முடியும்.

இந்த கருவி மூலம் கடந்த 4 மாதங்களில் சராசரியாக தினசரி 7000 உறுதிப்படுத்தப்படாத டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எப்படி செயல்படுகிறது, இதனால் யார் பலனடைவார்கள் என்று கேள்வி வருகிறதா? அதற்கான விடையை பார்க்கலாம் வாங்க.

ஐபேட் அளவில் உள்ள HHT கருவி

ஐபேட் அளவில் உள்ள HHT கருவி

ஐபேட் அளவில் இந்த HHT கருவி இருக்கிறது. ரயில்களுக்கான முன்பதிவு விளக்கப்படங்கள், அதாவது சீட் சார்ட் முன்னதாகவே தயாரிக்கப்பட்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. காகித முறையில் தான் இந்த விளக்கப்படங்கள் இதுநாள் வரை இருந்து வருகிறது.

யார் யாருக்கு எந்தெந்த இருக்கை

யார் யாருக்கு எந்தெந்த இருக்கை

அதாவது யார் யாருக்கு எந்தெந்த இருக்கை எந்தெந்த ரயில் நிலையத்தில் ஏறுவார்கள் என்ற விவரம் இந்த சார்ட்டில் தான் இடம்பெற்றிருக்கும்.

இதில் டிக் செய்து கொண்டே வந்தாலும் எந்தெந்த இருக்கை காலியாக உள்ளது, அவர்களது டிக்கெட் ரத்து செய்யப்பட்டதா என்பதை அறிவது சிரமம்.

இந்த சிரமத்தை போக்கும் வகையில் இந்த நிகழ்நேர இருக்கை கண்டறியும் கருவி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு

முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு

அதாவது முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டைக் கொண்டுள்ள பயணிகள் கடைசி நிமிடத்தில் வரவில்லை என்றாலோ பயணத்தை ரத்து செய்தாலோ காலியாக உள்ள பெர்த் HHT சாதனத்தில் காட்டப்படும்.

இது ரயில் டிக்கெட் பரிசோதகர் (TTE) காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு அதை ஒதுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி 7000 இருக்கைகள்..

தினசரி 7000 இருக்கைகள்..

RAC அல்லது காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகள் காலியாக உள்ள பெர்த்கள் குறித்த தகவலை TTE மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு 1390 ரயில்களில் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. பயனச் சீட்டு பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய கருவியின் மூலம் சுமார் 7000 இருக்கைகள் தினசரி வழங்கப்பட்டு வருவதாக தரவுத் தகவல்கள் தெரிவிக்கிறது.

உறுதி செய்யப்படாத பயணச் சீட்டு

உறுதி செய்யப்படாத பயணச் சீட்டு

முன்பதிவு செய்யாதவர்கள் மற்றும் உறுதி செய்யப்படாத பயணச் சீட்டை கொண்டுள்ளவர்கள் டிடிஇ-ஐ அணுகி இருக்கைக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் செலுத்தினால் டிக்கெட் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணம் செய்பவர்களின் பயணச் சீட்டை உறுதி செய்ய இந்த கருவி உதவும் எனவும் காலியாக உள்ள இருக்கைகளை பயணிகளுக்கு வழங்க இந்த கருவி உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து ரயில்களும் புதிய கருவி

விரைவில் அனைத்து ரயில்களும் புதிய கருவி

இந்த கருவி முழுமையாக கொண்டுவரப்படும் பட்சத்தில் ஆர்ஏசி பயணச் சீட்டு கொண்டவர்களுக்கும், காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கும் பேருதவியாக இருக்கும் எனவும் இவர்கள் அதிகளவு பயனடைவார்கள் எனவும் கணிக்கப்படுகிறது.

சோதனைக் கட்டத்தில் இருக்கும் இந்த கருவி அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் முழுமையாக அனைத்து ரயில்களிலும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் கட்டண முறையில் வசூல்

டிஜிட்டல் கட்டண முறையில் வசூல்

வெளியான தரவுகளின்படி, தற்போது வரை 10,745 HHT கருவிகள் பயன்பாட்டில் உள்ளது.

அதேபோல் தற்போது வரை தினசரி 5,448 RAC பயணிகளும், 2,759 காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளும் HHT கருவிகள் மூலம் பலனடைந்து வருகின்றனர்.

விரைவில் அனைத்து ரயில்களிலும் இந்த அம்சம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த HHT கருவிகள் மூலம் டிஜிட்டல் கட்டண முறையில் அபராதம் வசூலிக்கவும், டிக்கெட் கட்டணம் வசூலிக்கவும் முடியும்.

RAC மற்றும் காத்திருப்புப் பட்டியல் பயணிகள்

RAC மற்றும் காத்திருப்புப் பட்டியல் பயணிகள்

HHT முறை முழுமையாக அறிமுகம் செய்யப்பட்ட பிறகு RAC மற்றும் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் பெருமளவு பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கணினி மயமாக்கப்பட்ட கருவி ஆகும்.

இதன்மூலம் இருக்கைக் குறித்த தகவலையும் நிகழ்நேரத்தில் ஆன்லைனில் கண்காணிக்க முடியும். இந்த கருவி பலருக்கும் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Railways New Hand Held Terminals Device Checks Real Time Seat Availability

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X