ரயில் பயணிகள் கவனிக்கவும்: பயன்பாட்டுக்கு வந்தது புத்தம் புதிய சேவை.! என்னென்ன?

|

இந்திய ரயில்வே அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்திய ரயில்வே ஜனவரி 1, 2020 முதல் உதவி அல்லது தகல்களைத் தேடும் பயணிகளுக்காக ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண் 139-ஐ பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது.

ஹெல்ப்லைன் எண் 139

ஹெல்ப்லைன் எண் 139

குறிப்பாக இதன் மூலம் இந்திய ரயில்வே, ரயில் விசாரணைக்காக பல ஹெல்ப்லைன் எண்களை கொண்டசேவையினை கைவிட்டுள்ளது. அதன்படி பயணிகள் இப்போது ஒரே எண்ணில் அனைத்து உதவியையும் பெறலாம்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் இந்த ஹெல்ப்லைன் எண் 139-ஐ பயன்படுத்தி பயணிகள் தகவல்பெறலாம் அல்லது அவர்களின் புகார்களை பதிவு செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிந்துகொள்வது மிகவும் அவசியம்

அறிந்துகொள்வது மிகவும் அவசியம்

இதுதவிர இந்திய ரயில்வே தனது மில்லியன் கண்க்கான பயணிகளுக்கு உதவுவதற்காக Rail Madad மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இபபோது இந்திய ரயில்வேயின்ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண் 139பற்றி நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியம், அதற்காக 139 ஹெல்ப்லைன் (IVRS) மெனுவினை பற்றி விரவாகப் பார்ப்போம்.

திருடு போன ஸ்மார்ட்போன்களைப் கண்டுபிடிக்க நடைமுறைக்கு வந்த அரசின் புதிய திட்டம்!திருடு போன ஸ்மார்ட்போன்களைப் கண்டுபிடிக்க நடைமுறைக்கு வந்த அரசின் புதிய திட்டம்!

#1

#1: மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்புக்கு பயணிகள் 1-ஐ அழுத்த வேண்டும், இது உடனடியாக ஒருகால் சென்டர் நிர்வாகியுடன் இணைக்கிறது.

#2: விசாரணைக்கு வேண்டி பயணிகள் 2-ஐ அழுத்த வேண்டும், துணை மெனுவில், PNR நிலை, ரயிலின் வருகை / புறப்பாடு, தங்குமிடம்,கட்டணம் விசாரணை, டிக்கெட் முன்பதிவு, கணினி டிக்கெட் ரத்து, விழித்தெழு அலாரம் வசதி / இலக்கு எச்சரிக்கை, சக்கர நாற்காலி முன்பதிவு பற்றிய தகவல்கள், உணவு முன்பதிவு பற்றிய தகவல்கள், உணவு முன்பதிவு உள்ளிட்ட தகவல்களை பெறமுடியும்.

#3: கேட்டரிங் சார்ந்த புகார்களுக்கு பயணிகள் 3-ஐ அழுத்த வேண்டும்.

#4

#4: பொதுவான புகார்களுக்கு வேண்டி பயணிகள் 4-ஐ அழுத்த வேண்டும்.

#5: அடுத்து விஜிலென்ஸ் தொடர்பான புகார்களுக்கு பயணிகள் 5-ஐ அழுத்த வேண்டும்.

#6: விபத்தின் போது வினவல்களுக்கு பயணிகள் 6-ஐ அழுத்த வேண்டும்.

#7

#7: புகார்களின் நிலையை தெரிந்துகொள்ள பயணிகள் 9-ஐ அழுத்த வேண்டும்.

#8: கால் சென்டர் நிர்வாகியுடன் பேச பயணிகள் (*) -நட்சத்திர குறி அழுத்த வேண்டும்.

 ரயில்வே குறிப்பில்..

ரயில்வே குறிப்பில்..

மேலும் இந்தியன் ரயில்வே குறிப்பில் சொல்லப்பட்டது என்னவென்றால்,பொது புகார் எண் - 138, கேட்டரிங் சேவை - 1800111321, விழிப்புணர்வு - 152210, விபத்து / பாதுகாப்பு - 1072, எனது பயிற்சியாளரை சுத்தம் - 58888/138, SMS புகார் - 9717630982 மற்றும் புகார் மேலாண்மை அமைப்பு ஆதரவு போர்டல் போன்றவை ஜனவரி 1, 2020 முதல் பயனற்றதாகிவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை செய்த 4-வது நாடு இந்தியா தான்: டெல்லி மெட்ரோவில் அறிமுகம்- என்ன தெரியுமா?இதை செய்த 4-வது நாடு இந்தியா தான்: டெல்லி மெட்ரோவில் அறிமுகம்- என்ன தெரியுமா?

அதிக கவனம்

கொணடுவரப்பட்ட இந்த புதிய நடவடிக்கை அனைத்தும் துல்லியமாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது, குறிப்பாகஅதிக கவனம் செலுத்தும் திருத்த நடவடிக்கைக்கு உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Railways integrates its helpline numbers into a single number 139 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X