ரயில் டிக்கெட்கள் இனி QR ஸ்கேன் செய்யப்படும்! இந்திய ரயில்வே கொண்டுவந்த புதிய பாதுகாப்பு முறை!

|

கொரோனா தொற்றிலிருந்து தனிமனித இடைவேளை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கடைப்பிடிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முழு வீச்சில் மும்முரமாகச் செயல்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதில் பெற 12 ரயில் நிலையங்களுக்கு கியூஆர் ஸ்கேன் டிக்கெட் முறையை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

புதிய QR கோடு பயன்முறை

QR குறியீடு டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் பணியை வடமேற்கு ரயில்வே நிர்வாகம் தற்பொழுது துவக்கி உள்ளது. இதன்படி வடமேற்கு ரயில்வே நிர்வாகம் புதிய முயற்சியாக முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதில் பெற புதிய QR கோடு பயன்முறையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று மொரோதாபாத் ரயில் நிலைய மேலாளர் தரூண் பிரகாஷ் கூறியுள்ளார். விரைவில் இது அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் வடக்கு ரயில்வேயின் மொராதாபாத் பிரிவின் கீழ் டிக்கெட்டுகளில் அச்சிடப்பட்ட கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து டிக்கெட்டுகளை சரிபார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சரியான மனித இடைவேளை மற்றும் மனிதனிடமிருந்து மனித தொடர்பு இல்லாமல் டிக்கெட் விநியோகம் மற்றும் செக்கிங் பின்பற்றப்படும் என்று மேற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மனித இனம் அழியும்; ஏன், எப்படி.? - ஸ்டீபன் ஹாக்கிங்கின் திகிலான விளக்கம்.!மனித இனம் அழியும்; ஏன், எப்படி.? - ஸ்டீபன் ஹாக்கிங்கின் திகிலான விளக்கம்.!

12 ரயில் நிலையங்களில் நடைமுறை

தற்பொழுது இந்த புதிய QR டிக்கெட் முறை முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதாகப் பெற ஜெய்ப்பூர், அஜ்மீர், ஜோத்பூர், பிகானேர், அபு ரோடு, உதய்பூர் நகரம், துர்காபுரா, ஆல்வார், ரேவாரி, சங்கனேர், லல்கர், மற்றும் காந்திநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்

இதன்மூலம் பயணிகள் காகிதமில்லாமல் முன்பதிவு செய்யப்படாத மொபைல் டிக்கெட்டுகளைப் இனி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த முறை விரைவில் முன்பதிவு டிக்கெட்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில் நிலையங்களுக்கும் இந்த பாதுகாப்பான QR ஸ்கேன் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதி செய்யும் ஆதாரங்கள் : உலகப்போருக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..?!உறுதி செய்யும் ஆதாரங்கள் : உலகப்போருக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..?!

QR கோடு ஸ்கேன் செய்யப்படும்

ஜூலை 22ம் தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த புதிய முயற்சி குறித்து மொராதாபாத் பிரதேச ரயில்வே மேலாளர் தருண் பிரகாஷ் கூறுகையில், "நாங்கள் எங்கள் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றங்களைச் செய்துள்ளோம், ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் ஒரு தனித்துவமான க்யூஆர் குறியீட்டை வெளியிட இது உதவுகிறது. க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யக்கூடிய பரிசோதகர்கள் வைத்திருக்கும் டெர்மினல்கள் அல்லது பிற க்யூஆர் ஸ்கேன் சாதனங்கள் மூலம் இந்த QR கோடு ஸ்கேன் செய்யப்படும். " என்று தெரிவித்துள்ளார்.

யுடிஎஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

இந்த QR டிக்கெட்களை பெற முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து யுடிஎஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், பயனர் 'பதிவு' மற்றும் 'உள்நுழைவு' செயல்முறையை முடிக்க வேண்டும். பிறகு, 'புக் டிக்கெட்' மெனுவில் உள்ள கியூஆர் முன்பதிவைத் தேர்ந்தெடுத்து ரயில் நிலையத்தின் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். பின் டிக்கெட் பெறுவதற்கான அடுத்த நடவடிக்கையைத் துவங்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Railways BIG Ticket Change: QR Code Scans Introduced To Check Tickets And Avoid Fake Tickets Menace : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X