இனி டிஜிலாக்கர் ஆதார், டிரைவிங் லைசன்ஸ் போதும்! ரெயில்வே அதிரடி.!
பிரதமர் நரேந்திர மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது டிஜிலாக்கரில் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதாரை சேமிக்க முடியும்.
இரயில் பயணத்தின் போது அசல் அடையாள அட்டைகளை தொலைத்துவிடுவோம் என்ற பயமா? இனி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

இந்திய குடிமக்கள் தங்களின் ஆவணங்களை கிளவுட்-ல் சேமித்து வைக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் டிஜிட்டல் சேமிப்பு சேவையான 'டிஜிலாக்கர்'-ல் உள்ள ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டையை பயணிகள் காண்பித்தால் ஏற்றுக்கொள்வதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரெயில்வே நிர்வாகம் தனது அனைத்து மண்டல முதன்மை வர்த்தக மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், டிஜிலாக்கர் சேவை மூலம் காண்பிக்கப்படும் இந்த இரு அடையாள அட்டைகளும் பயணிகளின் அடையாள ஆவணமான ஏற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளது.

"பயணிகள் தங்களின் டிஜிலாக்கர் கணக்கில் உள்நுழைந்து, 'வழங்கப்பட்ட ஆவணங்கள்' (Issued Documents) என்னும் பகுதியில் உள்ள ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார்அட்டையை காண்பித்தால், அதையே தக்க அடையாள ஆவணமாக கருதலாம்" என அந்த உத்தரவு கூறுகிறது. அதே நேரம் பயணிகள் தாங்களாக பதிவேற்றம் செய்து ' பதிவேற்றப்பட்ட ஆவணங்கள்' (Uploaded Documents) என்ற பகுதியில் உள்ள ஆவணங்களை தக்க அடையாள ஆவணமாக கருதமுடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது டிஜிலாக்கரில் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதாரை சேமிக்க முடியும். கிளவுட்-ஐ அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த தளமானது, தற்போது சிபிஎஸ்சி உடன் இணைந்து மாணவர்களின் டிஜிட்டல் வெர்சன் மதிப்பெண் பட்டியலையும் வழங்குகிறது. மேலும் டிஜிலாக்கரை பயன்படுத்துவோர் தங்களின் ஃபான் அட்டையையும் அதில் சேமித்துவைத்துக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications