Home
News

உஷார் ஐயா உஷாரு.! ஓரம்சாரம் உஷாரு.! மொபைல் & லேப்டாப் எல்லாம் உஷாரு.!

கடந்த மூன்று ஆண்டுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, மாதத்திற்கு 10 முதல் 15 ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் மற்ற கேட்ஜெட்கள் ரயிலில் திருடப்படுபவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, மாதத்திற்கு 10 முதல் 15 ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் மற்ற கேட்ஜெட்கள் ரயிலில் திருடப்படுபவதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அரசு ரயில்வே காவல்துறை எடுத்த நடவடிக்கையின் காரணத்தால் தற்பொழுது இரயில் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான கேட்ஜெட் திருட்டு

ஏராளமான கேட்ஜெட் திருட்டு

பெங்களூரு எக்ஸ்பிரஸ், கர்நாடகா எக்ஸ்பிரஸ், ராணி சென்னம்மா எக்ஸ்பிரஸ், பெங்களூரு-கேசுகுடா எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை மெயில் போன்ற தொலைதூர ரயில்களில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏராளமான கேட்ஜெட் திருட்டுகள் நடந்தேறியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் நகை மற்றும் பணம் திருடு போனது மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணிமைக்கும் நேரத்தில் திருட்டு

கண்ணிமைக்கும் நேரத்தில் திருட்டு

இரவு நேரங்களில் பயணிகள் ஆழ்ந்து தூங்கும் பொழுது, சார்ஜிங் போர்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடர்கள் திருடிச் சென்றுவிடுவதாக ரயில்வே காவல்துறைக்குத் பல புகார்கள் வந்துள்ளது. காவல்துறையினர் ரயில் கோச்களில் இரவு ரோந்து செய்தும் இந்நிலை தொடர்ந்துள்ளது.

ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்

ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்

உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜிங்கில் வைத்துவிட்டு சற்று கவனக் குறைவாக நீங்கள் இருந்தால், நிச்சயம் உங்கள் பொருட்களை இழந்திடக்கூடும் என்று காவல்துறை, பயணிகளைக் கடந்த சில ஆண்டுகளாய் எச்சரித்து வந்துள்ளது. முக்கியமாக ஏ.சி கோச்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கே இந்த ஆபத்து அதிகம் என்றும் காவலித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறைக்கப்பட்டுள்ள மொபைல் திருட்டு

குறைக்கப்பட்டுள்ள மொபைல் திருட்டு

கடந்த மூன்று ஆண்டுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, 2018 ஆம் ஆண்டில் மாதத்திற்குச் சராசரியாக 10 வீதத்திலிருந்து 8 போன்கள் வரை திருடு போயுள்ளது. ஆனால் தற்பொழுது கடந்த இரண்டு மாதங்களில் வெறும் 6 போன்கள் மட்டுமே திருட்டு போய்யுள்ளதாக காவலித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் லேப்டாப் திருட்டு

அதிகரிக்கும் லேப்டாப் திருட்டு

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாதது போல், லேப்டாப்களின் திருட்டு ரயில்களில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 8 லேப்டாப்கள் திருட்டு போயுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருடர்கள் ஜாக்கிரதை

திருடர்கள் ஜாக்கிரதை

அணைத்து திருட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில வழக்குகள் அந்த, அந்த ஊர்களின் ரயில்வே காவல்துறை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ரயில் திருட்டைத் தடுப்பதற்கு காவல்துறையினர் இன்னும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மக்களிற்குக் கூடுதல் கவனம் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Railway thieves now eye charging points : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X