Home
News

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. டிக்கெட் கேன்சல் இனி சிரமம் இருக்காது.. அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய தகவல்..

இந்திய ரயில்வே (Indian Railways) நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக உள்ளது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்திய ரயில்வே நாட்டின் உயிர்நாடி என்றும் அழைக்கப்படுகிறது. பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு முக்கிய இடத்திலும் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரயில் பயணிகள் கவுண்டரில் வாங்கும் டிக்கெட்டை (Railway counter tickets) கேன்சல் செய்ய புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது கவுண்டரில் வாங்கும் டிக்கெட்டை ஐஆர்சிடிசியின் வலைதளம் (IRCTC website) மூலமாகவும் எளிய வழியில் ரத்து செய்ய முடியும் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து ரத்து செய்யலாம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Railway Minister Ashwini Vaishnaw) நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். ஆனால் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான கட்டணத்தை முன்பதிவு மையத்துக்கு நேரில் சென்று தான் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. டிக்கெட் கேன்சல் இனி சிரமம் இருக்காது!

குறிப்பாக டிக்கெட் கவுண்டரில் காத்திருப்பு பட்டியல் பயணச்சீட்டை வாங்கியவர்கள் இருக்கை உறுதியாகாத நிலையில் ரயில் புறப்படுவதற்கு முன்பாக டிக்கெட் கவுண்டருக்கு சென்று ரத்து வேண்டிய நிலை உள்ளது. மேலும் இது குறித்து பா.ஜ.க. எம்.பி. மேதா விஷ்ரம் குல்கா்னி (BJP MP Medha Vishram Kulkarni) எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியது என்னவென்றால், ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து ரத்து செய்யலாம் என தெரிவித்தார். பின்பு ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் சமீபத்தில் கூட ரயில் டிக்கெட் பதிவு முதல் ரயில் பயணம் சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்கும் SwaRail (ஸ்வாரயில்) என்ற மொபைல்செயலியை அறிமுகம் செய்தது இந்திய ரயில்வே அமைப்பு. தற்போது இந்த செயலி பீட்டா டெஸ்டிங் காரணமாக குறிப்பிட்ட சில எண்ணிக்கையிலான பயனர்கள் மட்டுமே பயன்படுத்த கிடைக்கிறது. விரைவில் இந்த புதிய IRCTC-ன் ஸ்வாரெயில் ஆப்ஸஅனைத்து மக்களுக்கும் பயன்படுத்தக் கிடைக்குமென்று IRCTC தகவல் தெரிவித்துள்ளது.

SwaRail ஆப்ஸ் மூலம் இனி நொடியில் நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம். அதேபோல் ஈஸி கேன்சலேஷன் (easy cancellation), ரீஃபண்ட் பெறுவது (train ticket refund), PNR ஸ்டேட்டஸ் செக் செய்வது, ரயிலின் லைவ் ட்ராக்கிங், ரயில் சேவை தொடர்பான புகார் வழங்குதல், அன்ரிசர்வுடு டிக்கெட் புக்கிங் (UTS), உணவு ஆர்டர் (food order on train) செய்வது போன்ற அணைத்து சேவைகளையும் இனி பொதுமக்கள் இன்ற ஒற்றை SwaRail ஆப்ஸ் மூலம் செய்து முடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC-ன் முந்தைய ஆப்ஸ்கள் போல இல்லாமல், SwaRail ஆப்ஸ் குறைந்த அளவு ஸ்டோரேஜ்ஜை உங்கள் போனில் பயன்படுத்துகிறது. அதேபோல், டிக்கெட் புக்கிங் செய்யும் போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளையும் இந்த ஆப்ஸ் குறைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய தளங்களிலும் இந்த ஆப் டவுன்லோடு செய்யக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்திய ரயில்வே அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Railway counter tickets can be cancelled online: Minister Ashwini Vaishnav Important information
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X