Home
News

RailOne செயலியில் மீண்டும் இப்படியொரு சலுகையா? ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.!

இந்தியா முழுவதும் RailOne செயலியை பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் எடுப்போருக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத கட்டண சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்து ரயில்வே அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது, ரயில் பயணத்தின் டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதால், அனைத்து தரப்பு மக்களும் இதை அதிகம் விரும்புகின்றனர். அதாவது பேருந்து, விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயில் பயணம் செலவுக் குறைவாகவும், நீண்ட தூரப் பயணங்களுக்கு மிகவும் வசதியானதாகவும் உள்ளது.

RailOne செயலியில் மீண்டும் இப்படியொரு சலுகையா?

குறிப்பாக ரயில் பயணிகளின் வசதிக்காக இருக்கை முன்பதிவு, உணவு வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே பல்வேறு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறது. இதனால், ரயில் பயணம் பாதுகாப்பானது, வசதியானது மற்றும் சிக்கனமானது என்பதால் நாளுக்கு நாள் அதிகமான மக்கள் இதைத் தேர்வு செய்து வருகின்றனர்.

அதேபோல் ரயில் பயணத்தை மேலும் எளிமையாகவும் வசதியாகவும் மாற்றும் நோக்கில், இந்திய ரயில்வே RailOne செயலி மூலம் பயணிகளுக்கான சிறப்புத் தள்ளுபடி சலுகையை அறிமுகப்படுத்தியிருந்தது.

அதாவது RailOne செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி முன்பதிவு செய்யப்படாத (Unreserved) ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு 3 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்தச் சலுகை 2026 ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டு ஜூலை மாதம் 14-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்த சலுகை 2027-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே RailOne செயலி மூலம் யுபிஐ, டெபிட் கார்டு கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற எந்தவொரு டிஜிட்டல் கட்டண முறையையும் பயன்படுத்தி முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்தால் மொத்த கட்டணத்தில் இருந்து 3 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

அதேபோல் ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்தி 3 சதவீதம் கேஷ்பேக் பெறும் சலுகையானது வரும் 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரயில்வே அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பயணிகள் RailOne செயலியை ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து இந்த சலுகையை பெறலாம்.

RailOne செயலியில் மீண்டும் இப்படியொரு சலுகையா?

அதுவும் இந்த RailOne செயலி இந்திய ரயில்வேயின் பல்வேறு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும் பயனுள்ள மொபைல் செயலியாகும். இதன் மூலம் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை எளிதாகப் பதிவு செய்யலாம். மேலும், ரயிலின் தற்போதைய இயக்க நிலை (Running Status), பிளாட்பார்ம் எண், பெட்டி (Coach) விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். இதனுடன், பல்வேறு ரயில்வே தொடர்பான சேவைகளையும் ஒரே செயலியில் பயன்படுத்தும் வசதி உள்ளது.

மேலும் Rail One செயலியின் மிகப்பெரிய சிறப்பு, ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியத்தை நீக்குவதுதான். பயணிகள் தங்கள் மொபைல் போன் மூலமாகவே சில நிமிடங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தலாம். எளிய பயன்பாட்டு முறையால் அனைவரும் சிரமமின்றி இந்தச் செயலியைப் பயன்படுத்த முடிகிறது. எனவே, வேகமான, வசதியான மற்றும் நம்பகமான ரயில் பயண அனுபவத்தை வழங்கும் சிறந்த செயலியாக RailOne உள்ளது.

source 1

Best Mobiles in India

English summary
RailOne Extends 3 percent Bonus Scheme for Ticket Bookings Until March 2027
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X