ஜூலை 14 கடைசி.. RailOne செயலி இருக்கா? இனி இந்த சலுகை கிடைக்காது.. ரயில் பயணிகள் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது, ரயில் பயணத்தின் டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதால், அனைத்து தரப்பு மக்களும் இதை அதிகம் விரும்புகின்றனர். அதாவது பேருந்து, விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயில் பயணம் செலவுக் குறைவாகவும், நீண்ட தூரப் பயணங்களுக்கு மிகவும் வசதியானதாகவும் உள்ளது.
ரயில் பயணிகளின் வசதிக்காக இருக்கை முன்பதிவு, உணவு வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே பல்வேறு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறது. இதனால், ரயில் பயணம் பாதுகாப்பானது, வசதியானது மற்றும் சிக்கனமானது என்பதால் நாளுக்கு நாள் அதிகமான மக்கள் இதைத் தேர்வு செய்து வருகின்றனர்.

ரயில் பயணத்தை மேலும் எளிமையாகவும் வசதியாகவும் மாற்றும் நோக்கில், இந்திய ரயில்வே Rail One செயலி மூலம் பயணிகளுக்கான சிறப்புத் தள்ளுபடி சலுகையை அறிமுகப்படுத்தியிருந்தது. அதாவது Rail One செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி முன்பதிவு செய்யப்படாத (Unreserved) ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு 3 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை 2026 ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டு தற்போது ஜூலை 14 வரை மட்டுமே செல்லுபடியாகும். பயணிகள் அதிகளவில் டிஜிட்டல் முறையில் டிக்கெட்டுகளைப் பெற ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சியை இந்திய ரயில்வே செயல்படுத்தியுள்ளது.
Rail One செயலி இந்திய ரயில்வேயின் பல்வேறு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும் பயனுள்ள மொபைல் செயலியாகும். இதன் மூலம் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை எளிதாகப் பதிவு செய்யலாம். மேலும், ரயிலின் தற்போதைய இயக்க நிலை (Running Status), பிளாட்பார்ம் எண், பெட்டி (Coach) விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். இதனுடன், பல்வேறு ரயில்வே தொடர்பான சேவைகளையும் ஒரே செயலியில் பயன்படுத்தும் வசதி உள்ளது.
Rail One செயலியின் மிகப்பெரிய சிறப்பு, ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியத்தை நீக்குவதுதான். பயணிகள் தங்கள் மொபைல் போன் மூலமாகவே சில நிமிடங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தலாம். எளிய பயன்பாட்டு முறையால் அனைவரும் சிரமமின்றி இந்தச் செயலியைப் பயன்படுத்த முடிகிறது. எனவே, வேகமான, வசதியான மற்றும் நம்பகமான ரயில் பயண அனுபவத்தை வழங்கும் சிறந்த செயலியாக Rail One உள்ளது.
ஜூலை 14 கடைசி
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி, RailOne செயலி மூலம் UPI, டெபிட் கார்டு அல்லது பிற ஆன்லைன் கட்டண முறைகளைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகள் 3 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம். இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

அதாவது இந்தச் சலுகையைப் பெற விரும்பும் பயணிகள் ஜூலை 14ஆம் தேதிக்குள் Rail One செயலியைப் பதிவிறக்கம் செய்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு இந்தத் தள்ளுபடி கிடைக்காது. அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இந்தச் செயலி நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதோடு, எளிய டிஜிட்டல் டிக்கெட் முன்பதிவு வசதியையும் வழங்குகிறது. எனவே, இந்தச் சிறப்பு சலுகையைப் பயன்படுத்த விரும்புபவர்கள் ஜூலை 14ஆம் தேதிக்குள் Rail One செயலியைப் பயன்படுத்தி பயனடையலாம்.
ரயில் பயணிகளுக்கு இதுபோன்ற டிக்கெட் தள்ளுபடிகள் அரிதாகவே வழங்கப்படுகின்றன. எனவே தற்போது வழங்கப்படும் இந்தச் சிறப்பு சலுகையைப் பயணிகள் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டால், பயணச் செலவைக் குறைத்து அதிக நன்மைகளைப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications