ரயில் டெல் : 400 ரயில் நிலையங்களில் ஹாட்ஸ்பாட்களை அமைக்க திட்டம்.!

By Prakash
|

தற்போது அனைத்து இடங்களில் இன்டர்நெட் தேவை அதிகமாக உள்ளது, மேலும் மனிதர்கள் தற்போது உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள், ஆனால் இன்டர்நெட் பயன்பாடு இல்லாமல் இருக்கமாட்டார்கள்.

தற்போது ரயில்வே டெலிகல் நிறுவனம் 400 நிலையங்களில் வேகமாக செயல்படும் இன்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. இந்த வைஃபை இன்டர்நெட் திட்டம் பொறுத்தமட்டில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2018:

2018:

ரயில் டெல் நிறுவனம் இப்போது கூறியுள்ள அறிக்கையினபடி 2018-ல் இந்தியாவில் 400 நிலையங்களில் வைபை ஹாட்ஸ்பாட் மையங்கள் அமைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைஃபை:

வைஃபை:

ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பயணிகளுக்கு விரைவான இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக, 400 நிலையங்களில் வைஃபை நெட்வொர்க் அமைக்கப்படுகிறது. இந்த சேவைக்கு கூகுள் மற்றும் ரயில் டெல் நிறுவனம் ஒன்று சேர்ந்துள்ளது.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

இந்த திட்டம் பொதுவாக அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பயன்படும் விதமாக அமைந்துள்ளது, மேலும் இவற்றில் பல்வேறு நன்மைகள் உள்ளது என ரயில் டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 திட்டம்:

திட்டம்:

உலகின் மிகப்பெரிய பொது வைஃபை திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் வைஃபை சேவையானது தடையில்லாத உயர் வரையறை வீடியோவை பார்க்கவும், திரைப்படம், பாடல்கள், விளையாட்டுகள் ஆகியவற்றைப் பார்க்கவும் அதிவேக இணைப்புகளை வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர்:

செப்டம்பர்:

இந்த திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. மேலும் மிக விரைவில் இந்த திட்டம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Rail Tel plans to set up hotspot in 400 stations by 2018: Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X