நடுவானில் 30,000 அடி உயரத்தில் எரிபொருட்கள் நிரப்பிய ரபேல் விமானங்கள்: வைரல் புகைப்படம்!

|

30,000 அடி உயரத்தில் நடுவானில் எரிபொருட்கள் நிரப்பிய ரபேல் போர் விமானங்களின் புகைப்படங்கள் சமூகவலைதங்களில் வைரலாகி வருகிறது.

36 ரபேல் போர் விமானங்கள்

36 ரபேல் போர் விமானங்கள்

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்திய பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. பிரான்ஸ் தசால்ட் நிறுவனத்திடம் ரூ.59 ஆயிரம் கோடிக்கு தாக்குதல் ரகத்தை சேர்ந்த இந்த 36 ரபேல் போர் விமானங்களை வாங்க கையெழுத்திடப்பட்டது.

10 விமானங்கள் தயாரான நிலையில்

10 விமானங்கள் தயாரான நிலையில்

36 விமானங்களில் முதற்கட்டமாக 10 விமானங்கள் தயாரான நிலையில் இதை பெற்றுக் கொள்வதற்கு கடந்த அக்டோபர் மாதம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரான்ஸ் சென்றார்.

6 பயிற்சி விமானங்கள்

6 பயிற்சி விமானங்கள்

36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் என கூறப்படுகிறது. இருப்பினும் இதில் பிற விமானங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெறும்.

5 விமானங்கள் இந்தியா வருகை

5 விமானங்கள் இந்தியா வருகை

தயாராக உள்ள 10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக 5 விமானங்கள் பிரான்சில் இருக்கும் நிலையில் மீதமுள்ள 5 விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை பாரீசில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற விமானிகள் ஓட்டி வருகின்றனர்.

செங்குத்தான பனைமரத்தில் மரம் ஏறிய பெரிய சைஸ் மலைபாம்பு! வைரல் ஆகும் வீடியோ!செங்குத்தான பனைமரத்தில் மரம் ஏறிய பெரிய சைஸ் மலைபாம்பு! வைரல் ஆகும் வீடியோ!

30,000 அடி உயரத்தில் எரிபொருள்

30,000 அடி உயரத்தில் எரிபொருள்

இந்தியா பிரான்ஸ் இடையேயான 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்து இன்று இந்தியா வந்து சேரும் நிலையில் இதற்கு நடுவானில் 30,000 அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பும் காட்சி வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் விமானங்கள் மூலம் எரிபொருட்கள்

பிரான்ஸ் விமானங்கள் மூலம் எரிபொருட்கள்

ரபேல் விமானங்களுக்கு 30,000 அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பும் காட்சி வெளியாகி உள்ளது. இதற்கு எரிபொருள் நிரப்புவதற்கு என பிரான்ஸ் விமானங்கள் மூலம் எரிபொருட்கள் நிரப்பப்பட்டன.

அம்பாலா விமான நிலையத்தில் தரையிறக்கம்

அம்பாலா விமான நிலையத்தில் தரையிறக்கம்

பிரான்ஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 5 ரபேல் விமானங்களும் தரையிறங்கும் இந்தியாவின் அம்பாலா விமான நிலையத்தை சுற்றியுள்ள 4 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Rafale Fighter Jets Refuelled in Midair at 30,000 feet: Pic Viral in Social Media

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X