அனைத்து ஜெயில்களிலும் ரேடியோ ஸ்டேஷன்: கைதிகள் விரும்பிய பாடல், ஜாக்கி பயிற்சி., எதற்கு தெரியுமா?

|

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்ட சிறையில் வானொலி நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளது. அந்த மாநிலம் உள்ள 70 சிறைகளிலும் வானொலி அமைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகம் இது அந்த மாநில 70 சிறைகளில் தற்போது 26-வது சிறையில் வானொலி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேடியோ ஜாக்கி உள்ளிட்ட வசதிகள்

ரேடியோ ஜாக்கி உள்ளிட்ட வசதிகள்

சிறையில் அமைக்கப்படும் வானொலியானது குறிப்பிட்ட frequency-யில் செயல்படும் வழக்கமான வானொலி நிலையங்கள் போல் இல்லாமல், customised public address systems சிறைகளில் அமைக்கப்படும் ரேடியோ நெட்ஒர்க்கில் பயன்படுத்தப்படுகின்றன. ரேடியோ ஜாக்கி மற்றும் ரேடியோ ஸ்டேஷனுக்கான அனைத்து வசதிகளும் சிறைச்சாலைகளிலே ஒரு அறை ஒதுக்கப்படுகிறது. மேலும் அனைத்து அறைகளிலும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

கைதிகள் விரும்பும் பாடல்கள்

கைதிகள் விரும்பும் பாடல்கள்

கைதிகள் தாங்கள் விரும்பும் பாடல்களை எழுத்தின் மூலம் எழுதி ஒலிபரப்ப கோரிக்கை விடுக்கலாம். பாடல்களை ஒலிபரப்பும் முன் அதனை கேட்ட கைதிகளின் பெயரை ரேடியோ ஜாக்கி அறிவிப்பார். சிறைச்சாலையில் அமைக்கப்படும் உள்வானொலி நிலையங்களை நடத்துவதற்கு கைதிகளையும் பயன்படுத்தி கொள்கின்றனர். ஆர்வம் மற்றும் திறமையுள்ள கைதிகளுக்கு சிறைகளுக்கே நேரடியாக வந்து தொழில் முறை பயிற்சி அளிக்க பல ரேடியோ ஜாக்கிகள் உதவுகின்றனர்.

Google-க்கே இந்த நிலையா., ஆனா இந்தியர்கள் ஹேப்பி அன்னாச்சி: என்ன தெரியுமா?Google-க்கே இந்த நிலையா., ஆனா இந்தியர்கள் ஹேப்பி அன்னாச்சி: என்ன தெரியுமா?

சிறிது பொழுது போக்கு அம்சங்கள்

சிறிது பொழுது போக்கு அம்சங்கள்

சிறையில் உள்ள கைதிகள் பெரும்பாலானோர் மன அழுத்தத்திலும் தனிமையிலும் தவித்து வருகின்றனர். எனவே அவர்களின் பிற கவனங்களை திசை திருப்பும் வகையில் சிறிது பொழுது போக்கு அம்சங்களை வழங்கினால் நன்றாக இருக்கும் என்பதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள்

கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள்

அதுமட்டுமின்ற தனிப்பட்ட கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான அறிவிப்புகள், சிறைக்குள் நடைபெறும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் குறித்தும் வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வருமா., வராதா இல்ல வருவதற்கு ஏதாவது அறிகுறி இருக்கா., BSNL-ன் அந்த சேவைக்கான தேதி மீண்டும் மாற்றம்!வருமா., வராதா இல்ல வருவதற்கு ஏதாவது அறிகுறி இருக்கா., BSNL-ன் அந்த சேவைக்கான தேதி மீண்டும் மாற்றம்!

பல நிபணர்களுடன் கலந்துரையாடல்

பல நிபணர்களுடன் கலந்துரையாடல்

மேலும் கைதிகளின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பற்றிய தகவல்களும் வானொலியில் வாசிக்கப்படும் எனவும் அதற்கிடையே சட்டரீதியிலான தீர்வுகளை கைதிகளுக்கு எடுத்து கூறும் வகையில் பல நிபணர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Pic courtesy: Social media

Best Mobiles in India

English summary
Radio stations planned to set in all prisons

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X