Home
News

கொஞ்சம் கூட யோசிக்காதீங்க! நியாயமான விலையில் தரமான Fire Boltt Supernova ஸ்மார்ட்வாட்ச்.!

Fire Boltt Supernova ஸ்மார்ட் வாட்ச் ஆனது ப்ளூடூத் காலிங் அம்சத்தோடு வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது பெரிய AMOLED டிஸ்ப்ளே மற்றும் 123 விளையாட்டு முறைகள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு என பல ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

சிறந்த ஸ்மார்ட்வாட்ச்

சிறந்த ஸ்மார்ட்வாட்ச்

பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்து வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் Fire Boltt ஆகும். பட்ஜெட் விலை மற்றும் மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவில் ஸ்மார்ட் வாட்ச் தேடுபவர்களின் பலருக்கும் சிறந்த தேர்வாக இருப்பது ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் தான்.

அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவு

அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவு

Fire Boltt நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் போர்ட்போலியோவை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் Fire Boltt Supernova என்ற ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ப்ளூடூத் காலிங் அம்சம், பெரிய அளவிலான அமோலெட் டிஸ்ப்ளே என பல மேம்பட்ட ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்கிறது. வாய்ஸ் அசிஸ்டென்ட், 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள் என பல்வேறு விலையை மிஞ்சிய அம்சங்கள் இதில் உள்ளது.

சூப்பர்நோவா ஸ்மார்ட்வாட்ச்

சூப்பர்நோவா ஸ்மார்ட்வாட்ச்

ஃபயர் போல்ட்டின் இணை நிறுவனர்களான ஆயுஷி மற்றும் அர்னவ் கிஷோர் இந்த சூப்பர் நோவா ஸ்மார்ட்வாட்ச் குறித்து கூறுகையில், "சூப்பர்நோவா ஸ்மார்ட்வாட்ச் ஃபேஷன் மற்றும் டெக்னாலஜியின் சரியான கலவை ஆக இருக்கும். நேர்த்தியான இந்த ஸ்மார்ட்வாட்ச் சிறந்த இன் கிளாஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மெட்டாலிக் ஃப்ரேம் மற்றும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பேண்ட் என பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இது இருக்கிறது. குறிப்பாக வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய சூப்பர் நோவா ஸ்மார்ட்வாட்ச் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என கூறியுள்ளனர்.

ஃபயர் போல்ட் சூப்பர்நோவா விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ஃபயர் போல்ட் சூப்பர்நோவா விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ஃபயர் போல்ட் சூப்பர்நோவா ஸ்மார்ட்வாட்ச் ஆனது இந்தியாவில் ரூ.3,499 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சை மஞ்சள், ஆரஞ்ச், ப்ளூ, பிளாக், வெளிர் கோல்ட், கோல்ட் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் வாங்கலாம். இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது பிளிப்கார்ட் மற்றும் Fireboltt.com இல் விற்பனைக்கு கிடைக்கும்.

ஃபயர் போல்ட் சூப்பர்நோவா சிறப்பம்சங்கள்

ஃபயர் போல்ட் சூப்பர்நோவா சிறப்பம்சங்கள்

ஃபயர் போல்ட் சூப்பர்நோவா சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 368*448 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 500 nits உச்ச பிரகாச ஆதரவைக் கொண்ட பெரிய அளவிலான 1.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 123 ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது SpO2 கண்காணிப்பு, 24/7 இதய துடிப்பு கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு, பல்வேறு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு என பல முறைகளை கொண்டிருக்கிறது.

மென்மையான இணைப்பு விருப்பம்

மென்மையான இணைப்பு விருப்பம்

இணைப்பு ஆதரவுகளாக ஃபயர் போல்ட் சூப்பர் நோவா ஸ்மார்ட்வாட்ச் இல் ப்ளூடூத் 5.0 பொருத்தப்பட்டுள்ளது. அழைப்பு ஆதரவுக்கு என உள்ளமைக்கப்பட்ட மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் இதில் இருக்கிறது. அனைத்து வெளிப்புற சாதனங்களில் இருந்தும் மென்மையான இணைப்பு விருப்பத்தை இதில் பெறலாம். காலிங், காலிங் ஹிஸ்டரி, டயல் பேடிற்கான விரைவான அணுகல் என பல ஆதரவுகள் இதில் உள்ளது.

5 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

5 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

பாதுகாப்பு அம்சத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்வாட்ச் வாட்டர் ரெசிஸ்டென்ட், டஸ்ட் எதிர்ப்பு தன்மையை உறுதி செய்யும் வகையிலான IP67 மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் நீடிக்கும். ஐஓஎஸ் ஆண்ட்ராய்ட் ஆகிய இரண்டு சாதனங்களுக்கும் இது இணக்கமானது.

ஹேண்ட்ஸ் ஃப்ரீ நேவிகேஷன்

ஹேண்ட்ஸ் ஃப்ரீ நேவிகேஷன்

ஃபயர் போல்ட் சூப்பர்நோவா ஸ்மார்ட்வாட்ச்சில் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

ஹேண்ட்ஸ் ஃப்ரீ நேவிகேஷன் மூலம் பயனர்களுக்கு உதவும் வகையில் இதில் உள்ளமைக்கப்பட்ட வாய்ஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஸ்மார்ட்போனை விரைவாக கட்டுப்படுத்தலாம். கேமரா கட்டுப்பாடு, இசைக் கட்டுப்பாடு, குடிநீர் நினைவூட்டல்கள், வானிலை புதுப்பிப்பு, ஸ்மார்ட் அறிவிப்பு என பல ஷார்ட்கட் அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Quality Smartwatch at a Reasonable Price: Fire Boltt Supernova Smartwatch Launched with 123 Sports Mode, Bluetooth Calling Feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X