Home
News

குறைந்த விலையில் பிளாக்ஷிப் சக்தி.. புது Snapdragon சிப்செட்.. இனி வாங்கும் போனில் இந்த SoC இருக்கா பாருங்க..

குவால்காம் (Qualcomm) நிறுவனம் அதன் புதிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது. இது மலிவு விலையில் ஃபிளாக்ஷிப் சக்தியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி வரும் போன்களில் இந்த சிப்செட்டை எதிர்பார்க்கலாம்.

Snapdragon 8s Gen 3 SoC: குவால்காம் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட், மலிவு விலை பிளாக்ஷிப் போன்களுக்கான சிப்செட்டாக திகழ்கிறது. இது உண்மையில், மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்டாக ஸ்மார்ட்போன் சந்தையை புரட்டிபோடப் போகிறது. காரணம், இது AI திறன், மேம்பட்ட இணைப்பு மற்றும் சிறந்த ஒலி தரம் போன்ற உயர்தர அம்சங்களை பட்ஜெட்டில் வழங்கவுள்ளது.

குறைந்த விலையில் பிளாக்ஷிப் சக்தி.. புது Snapdragon சிப்செட்..

மலிவு விலை ஃபிளாக்ஷிப் போன் சிப்செட்: உண்மையில் இந்த புதிய மலிவு விலை ஃபிளாக்ஷிப் போன்களுக்காக சிப்செட் என்னென்ன செய்யும் என்பதை இப்போது பார்க்கலாமா? இது பல ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு உயர்தர அம்சங்களைக் கொண்டு வருகிறது. இது பயனர்களுக்கு அற்புதமான AI அம்சங்களை அனுபவிக்க அனுமதிக்க போகிறது. இது பிளாக்ஷிப் போன்களில் இன்பில்ட் செய்யப்பட்ட சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை பயன்படுத்த அனுமதிக்க போகிறது.

ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் விபரம்: அதேபோல், கேமரா அம்சத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவிருக்கிறது. மலிவு விலை பிளாக்ஷிப் போன்களில் நம்பமுடியாத யதார்த்தமான மொபைல் கேமிங் அனுபவத்தை இந்த ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் வழங்கப்போகிறது. இது பட்ஜெட் போன்களை விட இந்த சிப்செட் உதவியுடன் வெளிவரவிருக்கும் ஸ்மார்ட்போன்களில் என்ன மேம்படுத்தல்களை பார்க்கலாம் என்பது இங்கே.

எந்த போன்களில் இந்த சிப்செட்டை எதிர்பார்க்கலாம்?

உதாரணமாக, இந்த சிப்செட் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் பைச்சுவான்-7பி, லாமா 2, ஜெமினி நானோ மற்றும் ஜிபு சாட்ஜிஎல்எம் போன்ற AI அம்சங்களை பயனர்கள் எளிமையாக பயன்படுத்த முடியும். ஹானர் (Honor), iQOO, ரியல்மி (realme), ரெட்மி (Redmi) மற்றும் சியோமி (Xiaomi) போன்ற நிறுவனங்களால் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் ஸ்மார்ட்போன்களில் நாம் இந்த புதிய ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 சிப்செட்டை எதிர்பார்க்கலாம்.

குறைந்த விலையில் பிளாக்ஷிப் சக்தி.. புது Snapdragon சிப்செட்..

இதன் சக்தி எத்தகையது? இந்த புதிய சிப்செட் 3.0 GHz வரை வேகத்தை எட்டக்கூடிய ஒரு முதன்மை மையத்தையும், 2.8 GHz வரையிலான வேகத்தை எட்டும் நான்கு செயல்திறன் கோர்களையும், 2.0 GHz வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்ட மூன்று செயல்திறன் கோர்களையும் கொண்டுள்ளது. இது 24ஜிபி வரை LP-DDR5x ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் அம்சத்தை ஆதரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேமரா சக்தி: இந்த சிப்செட் அதிகபட்சமாக 36MP ரெசல்யூஷன் கொண்ட மூன்று கேமரா அமைப்பு, முறையே 64MP மற்றும் 36MP வரை தீர்மானம் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு, 108MP வரை ஷாட்களைப் பிடிக்கும் திறன் கொண்ட ஒற்றை-கேமரா அமைப்பு ஆகியவற்றை இது ஆதரிக்கும். அதிகபட்சமாக 200MP தெளிவுத்திறனில் புகைப்படங்களை எடுக்க இது அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஜென் Wi-Fi: இந்த புதிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் ஆனது Snapdragon X70 5G மோடத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 5.8 Gbps வரை வேகத்தை அனுமதிக்கிறது. இந்த மோடம் சமீபத்திய Wi-Fi 7 ஆதரவையும் ஆதரிக்கிறது. இது உண்மையில் மலிவு விலையில் நம்பகமான மற்றும் அதிவேக வயர்லெஸ் இணைப்பை உறுதி செய்கிறது. டிஸ்பிளே பற்றி பேசுகையில், இது 144Hz ரெஃப்ரஷ் ரேட் வரையிலான டிஸ்பிளேவை ஆதரிக்கிறது.

டிஸ்பிளே சக்தி: இது உண்மையில் Quad HD+ டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது. கேமிங் மற்றும் மல்டிமீடியா தரத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறது. மார்ச் இறுதி முதல் இந்த ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட்டுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை நாம் சந்தையில் பார்க்கலாம் என்று குவால்காம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Qualcomm unveiled Snapdragon 8s Gen 3 chipset specifically designed for affordable flagship Mobiles and Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X