Home
News

Qualcomm-ன் புதிய சிப்செட்டால் பட்ஜெட் போன்லாம் இனி தீ-ஆ வேலை செய்ய போகுது! எப்படி?

ஒரு ஸ்மார்ட்போன் சாதனம் சிறப்பாக திறம்படச் செயல்பட வேண்டும் என்றால் அதில் சிறந்த சிப்செட் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஸ்மார்ட்போனின் இருதயமாகவும், மூலையாகவும் செயல்படுவது சிப்செட் தான். சிப்செட் என்றதும் நினைவிற்கு வரும் முதல் பெயர் ஸ்னாப்டிராகன் (Snapdragon) தான்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்டை அறிமுகம் செய்து, சிப்செட் மார்க்கெட்டில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த சிப்மேக்கர் நிறுவனமாக குவால்காம் (Qualcomm), இப்போது அதன் வரிசையில் புதிய சிப்செட்டை அறிமுகம் செய்யவுள்ளது. சீனாவின் பெய்ஜிங் மாநகரில், வரும் மார்ச் 17 ஆம் தேதி குவால்காம் நிறுவனம் அதன் புதிய ஸ்னாப்டிராகன் சிப்பை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

Qualcomm-ன் புதிய சிப்செட் பட்ஜெட் போன்களை தீயாய் மாற்றப்போகிறது!

Qualcomm புது சிப்செட்டை அறிமுகம் செய்கிறதா?

Qualcomm அறிமுகம் செய்யவிருக்கும் இந்த புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட், நிறுவனத்தின் 7 சீரிஸ் வரிசைக்குள் ஒரு புதிய சேர்ப்பாகச் சேர்க்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அது ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 1 ஆக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. மற்றொரு தகவலின் படி நிறுவனம், ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 1 மற்றும் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 2 உட்பட இரண்டு ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் சிப்களை அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது.

குவால்காம் நிறுவனம் இரண்டு 7 சீரிஸ் சிப்செட்களில் வேலை செய்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த சிப்செட்கள் SM7550 எண் உடன் காணப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் 17 ஆம் தேதி வெளியிடப்படும் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப் SM7475 எண்ணைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 1 ஆக இருக்கக்கூடும்.

வெய்போவில் அறியப்பட்ட டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தகவலின் படி, ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 1 ஆனது அண்டர்க்ளாக் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 வகையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட்டை விட சிறியளவு குறைவான பெர்பார்மென்ஸை கொண்டிருக்கும். இது மிட் பட்ஜெட் சாதனங்களுக்கு சிறந்ததாக திகழப் போகிறது.

Qualcomm-ன் புதிய சிப்செட் பட்ஜெட் போன்களை தீயாய் மாற்றப்போகிறது!

ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 1 எந்த போனில் வருகிறது? இதன் செயல்பாடு எத்தகையது?

இது Redmi , Realme , Honor, Oppo மற்றும் Vivo போன்ற பிராண்டுகளின் எதிர்கால சாதனங்களில் இந்த சிப்செட்டை நாம் காண அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. Snapdragon 7+ Gen 1 இயங்கும் போன்களை அறிமுகப்படுத்தும் சில பிராண்டுகள் இப்போதே தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. Redmi Note 12T Turbo மற்றும் Realme GT Neo 5 SE சாதனங்களில் இது முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் என்றும் ஊகிக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 12டி டர்போ, போகோ எஃப்5 என்ற பெயரில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் சாதனங்களில் இந்த சிப்செட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 1 சிப்செட் TSMC ஆல் தயாரிக்கப்பட்ட 4nm சிப்செட்டாக இருக்கக்கூடும். இது கார்டெக்ஸ்-எக்ஸ்2 பிரைம் கோர் 2.95 ஜிகாஹெர்ட்ஸ், 3x கார்டெக்ஸ் A510 கோர்கள் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 4 எக்ஸ் கார்டெக்ஸ் A710 கோர்கள் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.

கிராபிக்ஸ் பற்றிப் பேசுகையில் இது, Adreno 725 GPU உடன் 580Hz வரை வேகத்தில் இயங்கும். கடந்த மாதம் AnTuTu மதிப்பீடு பக்கத்தில் இந்த சிப்செட் 1,029,731 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கீக்பெஞ்சில், சிப்செட் சிங்கிள்-கோர் மற்றும் மல்டி-கோர் சோதனைகளில் முறையே 1215 மற்றும் 4064 புள்ளிகளைப் பெற்றது. ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிரீமியம் போன்களில் மட்டுமே கிடைக்கிறது. அதற்கு மாற்றாக இனி 7 சீரிஸ் சிப்செட்டை அதிக திறனுடன் அனுபவிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Qualcomm's new chipset makes budget phones work like super performance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X