புது Snapdragon 8s Gen 4 சிப்செட் அறிமுகம்.. iQOO முதல் POCO வரை.. எந்தெந்த போன்களில் முதலில் இடம்பெறும்?
குவால்காம் (Qualcomm) நிறுவனம் அதன் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை (Snapdragon 8s Gen 4 Chipset) அறிமுகம் செய்துள்ளது. இது மலிவு விலையில் வரும் ஃபிளாக்ஷிப் போன்களுக்கான சிப்செட் என்றும் குவால்காம் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. மேலும் வரும் நாட்களில் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் உடன் அறிமுகமாகும் என்கிற விவரங்களையும், குவால்காம் நிறுவனம் பகிர்ந்துள்ளது/.
இதுகுறித்த போஸ்டரின் வழியாக ரெட்மி (Redmi), ஐக்யூ (iQOO), சியோமி (Xiaomi), ஒப்போ (Oppo) மற்றும் மெய்ஸு (Meizu) நிறுவனத்தின் ட்ரீம்ஸ்மார்ட் (DreamSmart) ஆகிய நிறுவனங்களின் கீழ் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப் பொருத்தப்பட்ட மாடல்களாக அறிமுகம் செய்யப்படும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் புதிய ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் இடம்பெறும் (Snapdragon 8s Gen 4 phones)? குவால்காம் நிறுவனம் அதன் புதிய சிப்செட்டை அறிமுகம் செய்த உடனேயே, ஐக்யூஓ நிறுவனம் ஒரு போஸ்டரை வெளியிட்டு, ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் தான் இந்த சிப்செட்டை பெறும் முதல் ஸ்மார்ட்போன் என்று கூறியுள்ளது
விவோ நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஐக்யூ, அதன் இஸட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனின் மற்ற எந்த அம்சங்களையும் வெளியிடவில்லை என்றாலும், இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதமே அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ நிறுவனம் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதியன்று, ஐக்யூ இஸட்10 மற்றும் ஐக்யூ இஸட்10எக்ஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதனுடன் சேர்த்து இதுவும் அறிமுகம் செய்யப்படுமா என்பது காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனை தொடர்ந்து (டிப்ஸ்டர் எக்ஸ்பீரியன்ஸ் மோர் வழியாக கிடைத்த தகவலின்படி), ரெட்மி டர்போ 4 ப்ரோ (Redmi Turbo 4 Pro), ஷாவ்மீ சிவி 5 ப்ரோ (Xiaomi Civi 5 Pro), ஒப்போ கே13 ப்ரோ (Oppo K13 Pro) மற்றும் மெய்ஸூ 22 நோட் (Meizu 22 Note) ஆகிய ஸ்மார்ட்போன்களை ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் பேக் செய்யும்
உலகளாவிய சந்தையை இலக்காக கொண்ட போக்கோ எப்7 (Poco F7) மற்றும் ஷாவ்மீ 15 சிவி (Xiaomi 15 Civi) ஆகிய மாடல்களும் இந்த புதிய சிப்பை கொண்டிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த 2 போன்களும் ரெட்மி டர்போ 4 ப்ரோ மற்றும் ஷாவ்மீ சிவி 5 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களின் மறுபெயரிடப்பட்ட பதிப்புகளாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்யூ இஸட்10 ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம்: முந்தைய டீஸர்களின் வழியாக, இந்த ஸ்மார்ட்போனில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 7,300mAh பேட்டரி பேக் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7s Gen 3 SoC) உடன் வரும் என்பதும் உறுதிசெய்யபட்டுள்ளது.
விலையை பொறுத்தவரை ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,000 க்கும் குறைவான விலைக்கு அறிமுகம் ஆகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. இது ஸ்டெல்லர் பிளாக் மற்றும் கிளேசியர் சில்வர் என இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படுவம்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டப்படி ஐக்யூ இஸட்10 5ஜி மற்றும் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இருக்கும் இஸட்10 சீரீஸின் கீழ் ஐக்யூ இஸட்10 டர்போ (iQOO Z10 Turbo) மற்றும் ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ (iQOO Z10 Turbo Pro) ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும் என்கிற விவரங்கள் இதோ:
ஐக்யூ இஸட்10 டர்போ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8400 சிப்செட்
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- முன்னரே குறிப்பிட்டபடி 7000mAh பேட்டரி
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- ஷார்ட்-ஃபோகஸ் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- விலை ரூ.40,000 க்குள் (ரூ.39,990) இருக்கலாம்.
ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- LTPS பேக்லைட்டிங் உடன் கூடிய 6.78-இன்ச் 1.5கே டிஸ்பிளே
- பிளாஸ்டிக் மிட்-ஃபிரேம் டிசைன்
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட்
- அட்ரினோ 825 ஜிபியு
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 12ஜிபி ரேம்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 7000mAh பேட்டரி
- ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- விலை ரூ.45,000 க்குள் (ரூ.44,990) இருக்கலாம்.
2025 ஏப்ரல் மாதத்தில் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன?1. 1. 1. போக்கோ சி71 (POCO C71):
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 4
- 6.88-இன்ச் டிஸ்பிளே
- 12ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
- 32எம்பி டூயல் கேமரா
- 8எம்பி செல்பீ கேமரா
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 5,200mAh பேட்டரி
- 15W சார்ஜர்
- விலை ரூ.7,000 க்கும் குறைவாக இருக்கலாம்
2. ரியல்மி நார்சோ 80 ப்ரோ (Realme Narzo 80 Pro)
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 9
- 120Hz டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- 80W சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி
- விலை ரூ.20,000 க்குள் இருக்கும்
3. விவோ வி50இ (Vivo V50e)
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் மாத நடுப்பகுதி
- 6.77-இன்ச் 1.5K டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 50MP செல்பீ கேமரா
- 50எம்பி + 8எம்பி ரியர் கேமரா
- 90W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி
- விலை ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்


Click it and Unblock the Notifications








