இது இல்லாட்டி டோட்டல் வேஸ்ட்.. பட்ஜெட்ல புது போன் வாங்கப்போறீங்களா? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க போகும் நண்பர்களே கொஞ்சம் கவனியுங்க. குறிப்பாக பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க போகும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த பதிவு முழுக்க-முழுக்க உங்களுக்கானது.
போன் வாங்க போறீங்களா? ஸ்மார்ட்போன் வாங்கும் போது, அதில் ரேம் எவ்வளவு இருக்கிறது? ஸ்டோரேஜ் எவ்வளவு கிடைக்கிறது? கேமரா அம்சம் எப்படி இருக்கிறது? பேட்டரி ஆயுள் நீண்ட நாள் தாங்குமா? என்று அலசி ஆராய்ந்து, 1000 கணக்கான ஸ்மார்ட்போன் மாடல்களில் இருந்து, உங்களுக்கு பிடித்தமான தேர்வை செலக்ட் செய்து ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவீர்கள். இத்தனை நுணுக்கங்களை பார்த்து செலக்ட் செய்யும் பொழுது சிலர் முக்கியமான விஷயத்தை கவனிக்க தவறிவிடுகிறார்கள்.

ஸ்மார்ட்போன் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்: அது தான் ஸ்மார்ட்போனிற்கு இதயமாகவும், மூலையாகவும் செயல்படும் சிப்செட். ஸ்மார்ட்போனின் பெர்பார்மென்ஸ் மற்றும் பயனர் அனுபவத்தை சிறக்க செய்ய சிப்செட் மிகவும் முக்கியமானது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் என்று எடுத்துக்கொண்டாலே, குவால்காம் நிறுவனம் வழங்கும் ஸ்னாப்டிராகன் சிப்செட் தான் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுகிறது.
பட்ஜெட் போன்களுக்கான புது Qualcomm சிப்செட்: இப்போது சந்தையில் பலவிதமான ஸ்னாப்டிராகன் சிப்செட்கள் புழங்குகின்றன. பிளாக்ஷிப் போன்களுக்கென்று தனியான சக்தி வாய்ந்த சிப்செட்டை குவால்காம் நிறுவனம் வழங்கி வருகிறது. மறுபுறம் பட்ஜெட் போன்களுக்கான சிறந்த சிப்செட்டையும் குவால்காம் வழங்கி வருகிறது. இந்த வரிசையில் நிறுவனம் இப்போது பட்ஜெட் செக்மென்ட் மொபைல்களை சிறப்பானதாக மாற்ற புதிய சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 (Snapdragon 7+ Gen 3): குவால்காம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய சிப்செட் சாதனம் தான் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 (Snapdragon 7+ Gen 3) சிப்செட். இது பட்ஜெட் போன்களுக்கான புதிய சிப்செட் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலத்தில் இந்த சிப்செட் இல்லாத ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் சுத்த வேஸ்ட் என்றே கூட நாம் கூறலாம். ஏன் என்ன காரணம் மற்றும் விளக்கம் இதோ.

இந்த அம்சம் இனி உங்கள் போனில் இருப்பது முக்கியம்: 2023 ஆம் ஆண்டில் மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு என்று அது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI அறிமுகம் தான். கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட AI அம்சம் இப்போது ஒரே ஆண்டில் எவரெஸ்ட் மலை போல வேகமாக உயர்ந்து நிற்கிறது. இனி வரும் 2024 ஆம் ஆண்டில் மற்றும் அதற்கு பிந்தைய நாட்களில் AI அம்சம் மிக முக்கியமான அம்சமாக மாறப்போகிறது.
இன்பில்ட் AI அசிஸ்டன்ட் அம்சம்: பிளாக்ஷிப் போன்களில் மட்டும் AI அம்சம் கிடைத்தால் அது நியாயமற்றது தானே, இதை உணர்ந்த குவால்காம் நிறுவனம் இப்போது பட்ஜெட் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு AI அம்சம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புதிய Snapdragon 7+ Gen 3 சிப்செட் அம்சத்தை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இது உண்மையில் பட்ஜெட் போன்களில் இன்பில்ட் AI அசிஸ்டன்ட் அம்சத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது.
இன்னும் என்னலாம் செய்யும் இந்த புது சிப்செட்?
ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் சிப்செட் வரிசையில் மிகவும் சக்தி வாய்ந்த ராட்சசன் போல இந்த புதிய ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 சிப்செட் திகளப்போகிறது. இதுமட்டுமின்றி, இந்த சிப்செட் பட்ஜெட் போன்களில் 200MP வரையிலான விவிட் பிக்ச்சர் டீட்டைல், ஸ்பேசியல் ஆடியோ, LE ஆடியோ, ஹைப்பர் ரியலிஸ்டிக் கேமிங், அட்ரினோ பிரேம் மோஷன் என்ஜின் 2, WiFi 7 அம்சம் போன்ற ஏராளமான அம்சங்களை பட்ஜெட் சாதனத்தில் நிஜமாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








