இறுதியாக 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற கியூவல்காம்!

Posted By: Staff
இறுதியாக 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற கியூவல்காம்!

அமெரிக்க நிறுவனமான கியூவல்காம், இரண்டு வருடத்திற்கு முன்னரே, 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சேவையை பெற ஏலத்தொகையாக 1 கோடி டாலரை செலுத்தி உள்ளது. இருப்பினும் இந்த 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பயன்படுத்துவதிலும், இணையதள சேவை உரிமம் ஆகியவற்றை முடிவு செய்யவதிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக இந்தியா, ரேடியோ காற்றலைகளை 20 ஆண்டுகளுக்கு வழங்குகிறது. ஆனால் கியூவல்காம் நிறுவனத்திற்கு, தகவல் துறை அமைச்சகம் வெறும் 3 1/2 ஆண்டுகளுக்கு மட்டும் தான் வழங்கி உள்ளது.

இதற்கு கியூவல்காம் நிறுவனம், இந்த 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பெற சரியாக விண்ணப்பிக்க வில்லை என்றும், இதனால் தான் 3 1/2  மாதம் மட்டும் வழங்கியதாகவும் தகவல் துறை அமைச்சகம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வழங்கும் உரிமைக்காக கியூவல்காம் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. கியூவல்காம் நிறுவனத்தின் இந்த விண்ணப்பத்தினை சிரியாக இல்லை என்று நிராகரித்தவிட்டது இந்தியா. மீண்டும் அக்டோபர் மாதம் உரிமையை வழங்குவதாக இந்தியா ஏற்று கொண்டது.

22 டெலிகாம் பகுதிகளில் (டெலிகாம் ஸோன்), 4 பகுதிகளில் அமெரிக்க நிறுவனமான கியூவல்காம் 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வழங்குகிறது. இதில் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் தான் அனைத்து 22 பகுதிகளிலும் 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சேவையை வழங்குகிறது என்ற கூடுதல் தகவலும் வெளியாகி உள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot