Qualcomm ஸ்னாப்டிராகன் 690 5G சிப்செட் அறிமுகம்! மலிவு விலை போனிலும் இனி இவ்வளவு அம்சமா?

|

குவால்காம் நிறுவனம் தனது புதிய ஸ்னாப்டிராகன் 690 5 ஜி சிப்செட் பிராசஸரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்னாப்டிராகன் 690 5ஜி சிப்செட் வரும் ஆண்டின் மலிவான மற்றும் இடைப்பட்ட பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்காக பிரத்தியேகமாக 5 ஜி ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மலிவு விலை மற்றும் இடைப்பட்ட ஸ்மார்ட்போன்கள் வரும் ஆண்டுகளில் இந்த சிப்செட் உடன் தான் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஜி ஆதரவுடன் வெளிவரும் ஸ்னாப்டிராகன் 690

5 ஜி ஆதரவுடன் வெளிவரும் ஸ்னாப்டிராகன் 690

5 ஜி ஆதரவுடன் வெளிவரும் முதல் ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் சிப்செட் இதுவாகும். இந்த புதிய சிப்செட் OEM-களை இன்னும் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போன் சாதனங்களை வரும் மாதங்களில் அறிமுகப்படுத்த அனுமதிக்கிறது. ஸ்னாப்டிராகன் 690 தனியுரிம எக்ஸ் 51 மோடத்துடன் இனைந்து 5 ஜி இன் 6 ஜிஹெர்ட்ஸ் பதிப்பை வேகமான எம்.எம்.வேவ் தரநிலைக்கு பதிலாக அட்டவணையில் கொண்டு வர அனுமதிக்கிறது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனங்கள் நன்றி

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனங்கள் நன்றி

மோட்டோரோலா, நோக்கியா, எல்ஜி, டிசிஎல், ஷார்ப் மற்றும் விங்டெக் ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஸ்னாப்டிராகன் 690 5 ஜி சிப்செட் பொருந்திய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் முதல் நிறுவனங்களாக இருக்கும் என்று குவால்காம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான்! 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு!மாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான்! 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு!

பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்

பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்

இந்த புதிய ஸ்னாப்டிராகன் 690 5 ஜி சிப்செட், உலகெங்கிலும் உள்ள சுமார் 2 பில்லியினுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு 5 ஜி ஆதரவை வழங்கும் என்று குவால்காம் இன்கார்பரேட்டட் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டியானோ அமோன் தெரிவித்துள்ளார். புதிய ஸ்னாப்டிராகன் 690 5 ஜி சிப்செட், முந்தைய ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்டின் பல அம்சங்களை மேம்படுத்தி மிரட்டலான சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4K எச்டிஆர் வீடியோ பதிவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ்ஷிங் ரேட்

4K எச்டிஆர் வீடியோ பதிவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ்ஷிங் ரேட்

புதிய ஸ்னாப்டிராகன் 690 5 ஜி சிப்செட், குவால்காமின் ஐந்தாம் தலைமுறை AI இன்ஜின் மற்றும் 4K எச்டிஆர் வீடியோ பதிவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ்ஷிங் ரேட் மற்றும் மேம்பட்ட சிபியு மற்றும் ஜி.பீ. சேவையை வழங்குகிறது.புதிய சிப்செட் சாம்சங்கின் 8 என்எம் ஃபேப்ரிகேஷன் செயல்முறையைப் பயன்படுத்தி எட்டு கிரியோ 560 சிபியு கோர்களைக் கொண்டுள்ளது.

60 சதவீதம் அதீவேகம்

60 சதவீதம் அதீவேகம்

இதில் 2GHz வரை இயங்கக்கூடிய இரண்டு முக்கிய கோர்டெக்ஸ்-ஏ 77 மற்றும் 1.7GHz வரை இயங்கக்கூடிய ஆறு கோர்டெக்ஸ்-ஏ 56 துணை கோர்கள் உள்ளது.புதிய ஸ்னாப்டிராகன் 690 5 ஜி சிப்செட் அட்ரினோ 619L ஜி.பீ.யுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது அதன் முந்தைய 600 சீரிஸ் சிப்செட்களை விட சுமார் 60 சதவீதம் வேகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?

வினாடிக்கு 2.5 ஜிபி வரை பதிவிறக்கம் வேகம்

வினாடிக்கு 2.5 ஜிபி வரை பதிவிறக்கம் வேகம்

ஸ்னாப்டிராகன் 690 சிப்செட், வினாடிக்கு 2.5 ஜிபி வரை பதிவிறக்கம் வேகம் கொண்டது மற்றும் 5 ஜி நெட்வொர்க்குகளில் 660 எம்.பி.பி.எஸ் வரை பதிவேற்றும் வேகத்தையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சிப்செட் டி.டி.டி (TDD), எஃப்.டி.டி(FDD) மற்றும் டைனமிக் ஸ்பெக்ட்ரம் ஷேரிங் ஆகியவற்றுடன் ஸ்டாண்டலோன் (எஸ்.ஏ) மற்றும் ஸ்டாண்டலோன் அல்லாத (என்.எஸ்.ஏ) இரண்டு முறைகளையும் ஆதரிக்கிறது.

இனி இடைநிலை போனில் 192 மெகாபிக்சல் வரை கேமரா

இனி இடைநிலை போனில் 192 மெகாபிக்சல் வரை கேமரா

குவால்காமின் ஃபாஸ்ட் கனெக்ட் 6200 அமைப்புடன் கூடிய வைஃபை 6, புளூடூத் 5.1 மற்றும் 2 × 2 MU-MIMO ஆதரவுகளையும் கொண்டுள்ளது. அதேபோல், மலிவு விலை மற்றும் இடைநிலை ஸ்மார்ட்போன்களில் 192 மெகாபிக்சல் வரையிலான கேமரா பயன்பாட்டையும் இந்த புதிய சிப்செட் பயன்படுத்த அனுமதிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

ஆண்ட்ராய்டு பயனர்கள் குஷி

ஆண்ட்ராய்டு பயனர்கள் குஷி

ஸ்னாப்டிராகன் 690 நடுத்தர அடுக்கு சாதனங்களில் 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்க முடியும், மேலும் இந்தியாவின் நேவிக் (NavIC) செயற்கைக்கோள் நேவிகேஷன் அமைப்பையும் ஆதரிக்கிறது. இந்த புதிய ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் இடைநிலை ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை பயன்படுத்த வழிவகுத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Qualcomm announces Snapdragon 690 Chipset Brings 5G To Affordable Android Devices : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X