QR ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்யுறீங்களா? உஷார் மக்களே.. மொத்த பணமும் அபேஸாக வாய்ப்பு.. எச்சரிக்கும் அதிகாரிகள்
QR ஸ்கேன் (QR scan) செய்து கடைகளில், மால்களில் யுபிஐ பேமெண்ட் (UPI payment) செய்யும் நபர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியினால், இனிமேல் ஒவ்வொரு முறையும் நீங்கள் QR ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். காரணம் போலியான QR கோடுகளை மோசடிக்காரர்கள் பயன்படுத்தி, மக்கள் பணத்தை திருடி வருகிறார்கள். இத்தகைய சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
சிறிய பெட்டிக்கடை துவங்கி (small vendors), பெரிய-பெரிய ஷாப்பிங் மால் (shopping mall), தியேட்டர் (theaters), ஏன் சிட்டி பஸ் (city bus) முதற்கொண்டு இப்போது எல்லா இடங்களிலும் UPI மூலம் பேமெண்ட் (UPI payment) செலுத்தும் ஆன்லைன் பேமெண்ட் (online payment) சேவை பயன்படுத்த கிடைக்கிறது. பெரும்பாலான மக்கள் இப்போது QR மூலம் ஸ்கேன் செய்து சில நொடியில் பேமேன்டை (QR scan payment) செய்துவிடுகிறார்கள். இது எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு சேவையாக அமைகிறது.

QR ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்யுறீங்களா? உஷார் UPI மக்களே:
இந்தியாவில் இப்போது QR மூலம் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. UPI மூலம் பணம் செலுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கையும் மடமடவென சில ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த சேவைக்கு இப்போது ஆபத்து வந்துவிட்டது. சில மோசடிக்காரர்களின் தாக்குதல் தளமாக QR ஸ்கேன் பேமெண்ட் முறை (QR scan scam alert) தாக்கப்பட்டு வருகிறது.
கடைக்காரர்களுக்கே தெரியாமல், அவர்களுடைய கடை அல்லது பேமெண்ட் செய்ய அனுமதிக்கும் QR கோடுகளை (QR code) மோசடிக்காரர்கள் சைக்கிள் கேப்பில் மாற்றி, போலியான QR கோடுகளை அந்த அசல் QR கோடுகளுக்கு பதிலாக பதித்து, மக்கள் பணத்தை சைலெண்டாக திருடி வரும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் QR ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்யும் மக்களை கவனமாக இருக்கும்படி வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் (bank authorities warns about QR scan scam).
வங்கி அதிகாரிகள் கொடுத்த எச்சரிக்கை என்ன? இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க என்ன செய்வது?
போலியான QR ஸ்கேன் (fake QR scan code) மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை மூலம் பணம் பறிபோவது மட்டுமின்றி, உங்கள் வங்கி விபரங்கள் மோசடிக்காரர்களின் கைகளுக்கு கிடைத்துவிடுகிறது. இதை வைத்து, அவர்கள் வேறு சில மோசடி முறைகளை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் ஒட்டுமொத்த பணத்தை திருட கூட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதேபோல், இந்த மோசடியில் சிக்காமல் இருக்க சில பாதுகாப்பு முறைகளையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
1. எப்போதும் QR மூலம் கட்டணம் செலுத்தும் பொழுது அந்த கணக்கின் பெயரை (registered user name) கடைக்காரரிடம் கேட்டு உறுதிப்படுத்திய பிறகு பேமெண்ட் செய்ய முயலுங்கள்.
2. கூகுள் லென்ஸ் (Google lens) மூலம் QR கோடுகளை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்துவது பாதுகாப்பான முறையாக இருக்கும்.
3. கடைக்காரர்கள் கட்டாயம் UPI சவுண்ட் பாக்ஸ் (UPI sound box) வாங்கி பயன்படுத்துவது, கட்டணம் உங்கள் கணக்கிற்கு தான் வருகிறதா இல்லையா என்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
4. உங்கள் போனிற்கு தெரியாத நபரிடம் இருந்து ஏதும் QR கோடு ஷேர் செய்யப்பட்டால் அவற்றை ஸ்கேன் செய்யாதீர்கள்.
5. உங்கள் வங்கி கணக்கை எப்போதும் கண்காணிக்க (bank transaction details) மறக்காதீர்கள். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை கண்டால் உடனே வங்கியில் புகார் அளிக்கவும்.
6. பில்ட்-இன்-ஃபிராட் டிடெக்ஷன் அம்சத்தை (bilt-in-raud detection proctection feature) வழங்கும் UPI ஆப்ஸ்களை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது.
7. போலியான QR கோடுகளை தவறுதலாக நீங்கள் ஸ்கேன் செய்யும் நிலைமை ஏற்பட்டால் உடனே அது குறித்து வங்கியில் புகார் (register complaint in bank) அளிக்கவும்.
8. பதிவு செய்யப்பட்ட பயனர் விபரம் மற்றும் பெயரை உறுதி செய்த பின் QR பேமெண்ட்களை மேற்கொள்வது சிறப்பானது.
9. உங்கள் UPI ஆப்ஸை சரியான அப்டேட் (UPI apps update) உடன் இயக்குவது பாதுகாப்பானது.
10. QR ஸ்கேன் மூலம் நடைபெறும் ஸ்கேம் குறித்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி, அவர்களையும் பாதுகாப்பாக இருக்க செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








