Home
News

வாகனங்களில் இந்த QR குறியீடு ஒட்டிய பிறகு அதை நீக்கினால் நடவடிக்கை.. காவல் ஆணையர் முக்கிய தகவல்..

சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு காவல் உதவி க்யூஆர் குறியீடுகளை (qr code) வழங்கினார். அதுவும் ஆட்டோ, கார்களில் செல்லும் சமயத்தில் எதாவது ஆபத்து நேரிட்டால் பொதுமக்கள் உடனே காவல்துறையை அணுக இந்த க்யூஆர் குறியீடு உதவி புரியும் என்று கூறப்படுகிறது.

மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்டோ, கார்களில் செல்லும் சமயத்தில் பாதுகாப்பிற்கு ஆபத்து நேரிட்டால் இந்த க்யூஆர் குறியீட்டை உடனடியாக ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும் என்று தெரிவித்தார்

வாகனங்களில் இந்த QR குறியீடு ஒட்டிய பிறகு அதை நீக்கினால் நடவடிக்கை..

குறிப்பாக வாடகை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கு ஏதாவது அச்சம் ஏற்பட்டால் உடனே வாடகை வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள காவல்துறை க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல்துறை எஸ்ஒஎஸ் ( SOS) செயலியில் தொடர்பு கொண்டால், உடனடியாக அந்த வாகனம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று கண்காணிக்க முடியும்.

அதன்பின்பு அருகே உள்ள ரோந்து வாகனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உதவி தேவைப்படுபவருக்கு உடனடியாக உதவி செய்யப்படும். வாகனம் சென்று கொண்டிருக்கும் இடம், ஓட்டுநர் உள்ளிட்ட தகவல்களும் எளிதில் காவல்துறையினர் அறிய இந்த க்யூஆர் குறியீடு உதவிகரமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னையில் இயக்கப்படும் அனைத்து வாடகை வாகனங்களுக்கும் இந்த க்யூஆர் குறியீட்டை ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பின்பு க்யூஆர் குறியீடு ஒட்டிய பிறகு அதை நீக்கினால் வாகன ரோந்தின்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சமீபத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக எஸ்ஒஎஸ் எச்சரிக்கை அனுப்பும் வகையில் அதிநவீன காலணிகளை (sandal with an SOS alert feature) பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.

அதாவது உத்தரப்பிரதேசத்தின் (Uttar Pradesh) மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் (Maharajganj district) இருக்கும் ஆர்பிஐசி பள்ளியில் (RPIC School) அம்ரித் திவாரி (Amrit Tiwari) மற்றும் கோமல் ஜெய்ஸ்வால் (Komal Jaiswal) என்ற மாணவர்கள் இந்த புதுவித காலணியை உருவாக்கியுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள இந்த காலணியின் கீழ், பட்டன் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால், இந்த காலணியில் கீழ் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், குடும்பத்தினர், நண்பர்கள் என தேவையானவர்களுக்கு எச்சரிக்கை ஒலி (SOS alert) சென்றுவிடும். மேலும் இதன் மூலம் அவர்கள் இருக்கும் இருப்பிடத்தைக் (location) கூட எளிமையாக அறிந்துகொள்ள முடியும்.

இதுதவிர உரையாடல்களைக் கேட்கும் வகையில் இந்த அதிநவீன காலணி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காலணியின் விலை ரூ.2500 என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த காலணியை உருவாக்கிய மாணவர் அம்ரித் திவாரி கூறியது என்னவென்றால், நாங்கள் உருவாக்கிய செயலி மூலம் காலணியில் இருந்து செல்போனுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் காலணியில் கேமராவையும் (camera) பொறுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் சுற்றியுள்ள இருப்பிடம் மற்றும் காட்சிகளும் பகிரப்படும். அதேபோல் பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்தே இந்த காலணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று அந்த மாணவர் தெரிவித்தார்.

அதேபோல் இந்த காலணி வெறும் பாதுகாப்பு குறித்தான தகவல்களை மட்டும் அனுப்பாது. அதாவது இந்த செருப்பு அணிந்திருக்கும் ஒருவர், தாக்குதல் நடத்தும் ஒருவரை மிதித்தால், செருப்பில் இருந்து ஒருவகையான மின்சாரம் வெளியேறித் தாக்குதல் நடத்துபவரை நிலைகுலையச் செய்யும். அதேசமயம் செருப்பை அணிந்திருப்பவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

photo credit: adyartimes

More from GizBot

Best Mobiles in India

English summary
QR codes installed on autorickshaws and taxis for passenger safety: Action will be taken if removed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X