சத்தமின்றி சிலிண்டர்களில் ஒட்டப்படும் QR Code: எதற்கு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

|

இப்போது உள்ள புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சில முக்கியமான தொழில்நுட்பங்கள் மூலம் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது என்றே கூறலாம்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்

இந்நிலையில் இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில் புதிய தொழில்நுட்ப முறையைப் பின்பற்றுவது குறித்து அரசு முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது. இதுசார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. பல 5G போன்களுக்கு இந்த Moto போன் டஃப் கொடுக்கும்போல!!மோட்டோரோலா நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. பல 5G போன்களுக்கு இந்த Moto போன் டஃப் கொடுக்கும்போல!!

கேஸ் சிலிண்டர்கள்

கேஸ் சிலிண்டர்கள்

அதாவது இந்தியாவில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் தனியாக மானியத்துடனும், வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் தனியாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

பூமியை காக்க செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்துள்ளேன் பூமியை காக்க செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்துள்ளேன் "என் மகன் சொல்வது உண்மை"- ஆதாரம் இங்கே!

பிரச்சனைகள் உள்ளன..

பிரச்சனைகள் உள்ளன..

ஆனாலும் தற்போது வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் திருடப்படுவதும், அவை வணிக ரீதியில் பயன்படுத்தப்படுவதும் எனப் பல்வேறு பிரச்சனைகள் இங்கு உள்ளன. எனவே இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு இறங்கி உள்ளது.

40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Flipkart.! ஆளுக்கொரு டிவி பார்சல்.!40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Flipkart.! ஆளுக்கொரு டிவி பார்சல்.!

அமைச்சர் ஹர்தீப் சிங்

அமைச்சர் ஹர்தீப் சிங்

அதாவது உத்தரப் பிரதேசத்தில் உலக எல்பிஜி வாரம் 2022 (World LPG Week 2022) என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் கலந்துகொண்டார். குறிப்பாக இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தது என்னவென்றால்,அனைத்து எல்ஜிபி சிலிண்டர்களிலும் QR Code கோட்களை ஒட்ட அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

5Gக்கு மாற வேண்டிய நேரம் வந்துருச்சு: யோசிக்காம இந்த Realme போன் வாங்கி கெத்து காட்டுங்க.. விலை இதோ!5Gக்கு மாற வேண்டிய நேரம் வந்துருச்சு: யோசிக்காம இந்த Realme போன் வாங்கி கெத்து காட்டுங்க.. விலை இதோ!

க்யூஆர் கோட்கள்

மேலும் புதிதாக உற்பத்தி செய்யப்படும் சிலிண்டர்களில் க்யூஆர் கோட்கள் பதிக்கப்படும் எனவும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் சிலிண்டர்களில் இதற்காகத் தனியாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்கள்: 108 எம்பி கேமராவுடன் அறிமுகமான Realme 10 Pro 5ஜி! விற்பனை தேதி இதோ.!பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்கள்: 108 எம்பி கேமராவுடன் அறிமுகமான Realme 10 Pro 5ஜி! விற்பனை தேதி இதோ.!

 நல்ல கண்டுபிடிப்பு

குறிப்பாக இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உலக எல்ஜிபி வாரத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை செய்தார். பின்பு அவர் தனது ட்விட்டரில் இது ஒரு நல்ல கண்டுபிடிப்பு எனவும், இந்த க்யூஆர் குறியீடு ஏற்கனவே உள்ள சிலிண்டர்களில் ஒட்டப்படும் மற்றும் புதியவற்றில் வெல்டிங்செய்யப்படும். குறிப்பாக இதன் மூலம் திருட்டு,கண்காணிப்பு, தடமறிதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும் என்று பதிவிட்டுள்ளார்.

பேசாமல்.. 55-இன்ச் TV வாங்கலாம் போலயே! ஆசையை தூண்டும் விலையில் OnePlus-ன் லேட்டஸ்ட் டிவி!பேசாமல்.. 55-இன்ச் TV வாங்கலாம் போலயே! ஆசையை தூண்டும் விலையில் OnePlus-ன் லேட்டஸ்ட் டிவி!

20,000 சிலிண்டர்களில்...

20,000 சிலிண்டர்களில்...

அதேபோல் இது வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல், ஏற்கனவே இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. அதாவது ஏற்கனவே முதற்கட்டமாக 20,000 சிலிண்டர்களில் க்யூஆர் கோட் ஒட்டப்பட்டு உள்ளது. இனி வரும் மாதங்களில் 14.2 கிலோ வீட்டு சிலிண்டர்களில் இந்த க்யூஆர் கோட்பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி தள்ளுபடி: iPhone 14, 13 மற்றும் 12 மீது ஆப்பிள் டே சேல் தள்ளுபடி.! ஐபோன் வாங்க பெஸ்ட் டைம்.!அதிரடி தள்ளுபடி: iPhone 14, 13 மற்றும் 12 மீது ஆப்பிள் டே சேல் தள்ளுபடி.! ஐபோன் வாங்க பெஸ்ட் டைம்.!

எங்கு நிரப்பப்பட்டது?

எங்கு நிரப்பப்பட்டது?

சுருக்கமாகக் கூறவேண்டும் இந்த புதிய வசதி திருட்டு பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர இனிமேல் வீட்டில் உள்ள சிலிண்டர்கள் எங்கு தயாரிக்கப்பட்டது, எங்கு நிரப்பப்பட்டது என்பது குறித்த அனைத்து தகவல்களையும் மக்கள் க்யூஆர் கோட்களை ஸ்கேன் செய்வதன் மூலம் மிக எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் சில மாதங்களில் அனைத்து சிலிண்டர்களிலும் இந்த புதிய தொழில்நுட்பம்கொண்டு வரப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
QR Code silently affixed to Domestic LPG cylinders: Know why?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X