QR கோடு மோசடி! ஸ்மார்ட்போன் பயனர்களே உஷார்!

|

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் படி மொபைல் போன் மூலம் நடைபெறும் பணப் பரிமாற்றம், கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் பயனர்களுக்குக் கூடுதல் சிக்கலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கியூஆர் (QR) ஸ்கேன்

கியூஆர் (QR) ஸ்கேன்

கியூஆர் (QR) முறைப்படி செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. QR கோடு என்பதும் ஈமெயில் ஐ.டி போன்றதுதான், எப்படி ஸ்பேம் ஈமெயில்களை மக்கள் திறக்க வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறதோ, அதேபோன்று தான் தெரியாதவர்கள் அனுப்பும் QR கோடுகளையும் ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது.

மக்கள் அதிகளவில் ஏமாற்றுகிறார்கள்

மக்கள் அதிகளவில் ஏமாற்றுகிறார்கள்

QR கோடு மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானது மாற்றம் எளிதானது என்று நம்பி தான் மக்கள் அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்பொழுது சில காலங்களாக QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் மக்கள் அதிகளவில் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் தள்ளுபடி: 425 நாட்களுக்கும் தினசரி 3 ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்புஇதுதான் தள்ளுபடி: 425 நாட்களுக்கும் தினசரி 3 ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு

வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் பறிபோவதற்கான வாய்ப்பு

வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் பறிபோவதற்கான வாய்ப்பு

குறிப்பாக முன்பின் தெரியாத மற்றும் முகம் தெரியாத நபர்கள் உங்களுக்கு அனுப்பும் QR கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது. முகம் தெரியாத நபர்களின் QR கோடுகளை ஸ்கேன் செய்யும்போது உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பெரிதும் ஏமாற்றப்படுபவர்கள்

பெரிதும் ஏமாற்றப்படுபவர்கள்

ஹைதராபாத், பெங்களுர் போன்ற இடங்களில் தான் மக்கள் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வகை சிக்கலில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் OLX போன்ற தளங்களில் பொருள்களைப் பதிவு செய்து விட்டு வாங்குபவர்களுக்காகக் காத்திருப்பவர்கள்தான்.

யாருக்கு பாதிப்பு?- இன்று முதல் ஒன்று சேரும் 6 கிரகங்கள்: விளைவு என்ன?யாருக்கு பாதிப்பு?- இன்று முதல் ஒன்று சேரும் 6 கிரகங்கள்: விளைவு என்ன?

உஷாராக இருங்கள்

உஷாராக இருங்கள்

செகண்ட் சேல்ஸ் தளங்களில் பொருள்களைப் பதிவு செய்து விட்டு வாங்குபவர்களுக்காகக் காத்திருப்பவர்கள்தான். QR கோடு மோசக்காரர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிப்பது போலத் தொடங்கித்தான் இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் அனுப்பும் QR கோடுகளை ஸ்கேன் செய்ததும் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டு பணம் பறிபோய்விடும். இனிமேல் மிகவும் கவனமாக இருங்கள்.

Best Mobiles in India

English summary
QR Code Scan Scam Alert Smartphone Users Be Aware Of It : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X