Home
News

காகித வடிவில் ஆதார் பாதுகாப்பில்லை.. PVC ஆதார் வாங்க வலியுறுத்தும் UIDAI.. எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

ஆதார் அட்டை (Aadhaar card) இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். இதை பொதுமக்கள் காகித வடிவில் இருக்கும் ஆதார் அட்டைக்கு பதிலாக, புதிய பிவிசி ஆதார் அட்டைகளை எப்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குவதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் ஆதார் அட்டை (Aadhaar card) எதிர்பாராத விதமாக தொலைந்துவிட்டாலோ அல்லது காகித வடிவில் இருக்கும் ஆதார் அட்டை சேதம் அடைந்துவிட்டாலோ, நீங்கள் புது ஆதார் அட்டையை மிகவும் உறுதியான பிவிசி அட்டையாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கலாம். இதற்கான வழிகளை இப்போது UIDAI ஆதார் ஆணையம் வழங்குகிறது.

காகித வடிவில் ஆதார் பாதுகாப்பில்லை.. PVC ஆதார் வாங்க UIDAI அறிவுரை..

காகித வடிவில் ஆதார் பாதுகாப்பில்லை.. PVC ஆதார் வாங்க UIDAI அறிவுரை (PVC Aadhaar Card):

ஆதார் அட்டை அடிக்கடி சேதமடைவதால், ஆதார் ஆணையம் இப்போது மக்களுக்கு பிளாஸ்டிக் வடிவில் பிவிசி ஆதார் அட்டைகளை (Plastic Aadhaar Card) வழங்குகிறது. தற்போது வங்கி சேவை, வருமான வரி, இன்சூரன்ஸ் சேவையில் இருந்து சிலிண்டர் வாங்குவது வரையில் அனைத்திற்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டம் என்றால் ஆதார் அட்டை இல்லாமல் தனிநபரை உறுதி செய்யும் எந்த சேவைகளையும் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.இந்நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அண்மைக்காலமாக கையடக்கமான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை விநியோகித்து வருகிறது. இதற்கு கட்டணமாக வெறும் ரூ.50 வசூலிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இது நீர்-எதிர்ப்புத் திறன் கொண்டது. அதேபோல் தண்ணீரால் சேதமடையும் என்ற அச்சமின்றி எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதேபோல், இது காகிதம் போல இல்லாமல், நீண்ட நாள் பயன்படுத்த கூடிய வகையில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை அல்லது PVC கார்டு அடிப்படையிலான ஆதார் அட்டையை வழங்குகிறது.

காகித வடிவில் ஆதார் பாதுகாப்பில்லை.. PVC ஆதார் வாங்க UIDAI அறிவுரை..

PVC ஆதார் அட்டை ஏன் பாதுகாப்பானது?

இந்த கார்டானது டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான QR கோடுடன் ஃபோட்டோ மற்றும் முகவரி உள்ளிட்ட தேவையான உரிய விவரங்களுடன் பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை எப்படி பாக்கெட்டில் வைத்து எளிதாக செல்கிறோமோ அதேபோல் இந்த பிவிசி கார்டை எளிமையாக எடுத்து கொண்டு போகலாம்.

குறிப்பாக இந்த புதிய வகை பிவிசி ஆதார் அட்டை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். பாதுகாப்பான QR குறியீடு, ஹாலோகிராம், மைக்ரோ டெக்ஸ்ட், கோஸ்ட் பிக்ச்சர், வெளியீட்டு தேதி & அச்சு தேதி, குய்லோச் பேட்டர்ன், எம்போஸ்ட் அல்லது பொறிக்கப்பட்ட ஆதார் லோகோ உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய வகை ஆதார் அட்டை.

அதேபோல் ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கும் வரும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே ஆதார் அட்டைக்கு ஆர்டர் செய்ய முடியும். ஆனால் இந்த அட்டை வழங்குவதை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, ஆதாரில் பதிவுசெய்யப்படாதஎண்ணைக் கொண்டும் ஆர்டர் செய்யும் சேவையை யுஐடிஏஐ தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

PVC ஆதார் அட்டையை எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

குறிப்பாக இந்த சேவையை https://myaadhaar.uidai.gov.in/genricPVC என்ற இணையதளத்தில் பெறமுடியும். அதுவும் 5 நாட்களில், விரைவு அஞ்சலில் ஆதார் அட்டை வந்து சேரும். மேலும் குடும்பத்தினர் அனைவருக்கும் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற இதில் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த புதிய முறையில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை.

இது தொடர்பாக யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தது என்னவென்றால், ஆதார் அட்டை பெற யார் விண்ணப்பித்தாலும், அட்டையில் உள்ள முகவரிக்குத்தான் பிளாஸ்டிக் ஆதார் அட்டை செல்லும் எனவும், எனவே இதில் கண்டிப்பாக முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இன்னும் பேப்பர் வடிவில் ஆதார் அட்டையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, பிவிசி அட்டையில் உருவாக்கப்பட்ட உறுதியான மற்றும் மிகவும் பாதுகாப்பான ஆதார் அட்டைகளை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று இந்திய ஆதார் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. புதிதாக பிவிசி ஆதார் அட்டை ஆர்டர் செய்யும் மக்கள், ஆதார் தகவல்களை அப்டேட் செய்த பிறகு ஆர்டர் செய்வது சிறப்பானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
PVC Aadhaar Card Is The New Personal Identification Document For Indian Citizens
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X