Home
News

அப்டியே 5-ஆ மடிச்சு தூக்கிட்டு போய்டலாம்.. புது அட்வான்ஸ் இ-ஸ்கூட்டர்.. விலை என்ன தெரியுமா?

போல்டபில் ஸ்மார்ட்போன் (Foldable Smartphone), போல்டபில் லேப்டாப் (Foldable Laptop) போன்ற மடக்ககூடிய எலக்ட்ரிக் கேட்ஜெட்ஸ் சாதனங்களின் வரிசையில் புதிதாக போல்டபில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Foldable Electric Scooter) சாதனத்தை பியூர் எலக்ட்ரிக் (Pure Electric) என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் இதுவொரு புதுமை வாகனமாக களமிறங்கியுள்ளது. இதுவரை சந்தையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) மத்தியில், போல்டபில் டைப்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த புது இ-ஸ்கூட்டர் (e-Scooter) இதுவாகும். இதற்கு முன்பாக சில நிறுவனங்கள் இதேபோன்ற மடக்ககூடிய ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது.

அப்டியே 5-ஆ மடிச்சு தூக்கிட்டு போய்டலாம்.. புது அட்வான்ஸ் இ-ஸ்கூட்டர்

இருப்பினும், இவ்வளவு சக்தி உடனும், எல்லா சூழ்நிலைகளிலும் நிலைத்து உழைக்கும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இதுவரை எந்த நிறுவனமும் அறிமுகம் செய்யவில்லை. குறிப்பாக, இதன் எடை வெறும் 16 கிலோகிராம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் மடக்கி எடுத்துச்செல்லலாம்.

இந்த போல்டபில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாதனத்தை பியூர் எலெக்ட்ரிக் நிறுவனம், பியூர் எலக்ட்ரிக் அட்வான்ஸ் ஃபிளெக்ஸ் ஃபோல்ட்டிங் இ-ஸ்கூட்டர் (Pure Electric Advance Flex folding e-scooter ) என்ற பெயருடன் காம்பெக்ட் சைஸில் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்வான்ஸ் ஃப்ளெக்ஸ் அதன் அளவின் ஒரு பகுதிக்கு 5 ஸ்டெப்களில் மடிக்கக்கூடிய வித்தியாசமான போல்ட்டிங் மடிப்புகளுடன் வருகிறது.

இது 710W எலக்ட்ரிக் மோட்டாரால் இயக்கப்படுகிறது. இந்த காம்பெக்ட் போல்ட்டிங் வாகனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 39கிமீ (24 மைல்கள்) வரை பயணிக்கலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த இ-ஸ்கூட்டர் அலுவலக மேசையின் கீழ் அல்லது காரின் டிக்கியில் கட்சிதமாக பொருந்தும் அளவுக்கு சிறியதாக இருக்கிறது. அட்வான்ஸ் ஃப்ளெக்ஸ் இ-ஸ்கூட்டர் வெறும் 16 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்டியே 5-ஆ மடிச்சு தூக்கிட்டு போய்டலாம்.. புது அட்வான்ஸ் இ-ஸ்கூட்டர்

குறுகிய பயணங்களுக்கு உங்களை அழைத்துச் செல்ல போதுமான ஆற்றலைக் கொண்டுள்ளது. இது கடினமான நிலப்பரப்பு அல்லது சீரற்ற வானிலை நிலைமைகளில் இயங்கும் படி, போதுமான சக்தியுடன் வருகிறது. புதிய பியூர் எலக்ட்ரிக் அட்வான்ஸ் ஃப்ளெக்ஸ் ஒரு பியுச்சரிஸ்டிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது மிகவும் வசதியான சவாரிக்கு இரண்டு பிரத்யேக ஃபுட்ரெஸ்ட்களைக் கொண்டுள்ளது.

இது, இதில் பயணிக்கும் பயனருக்கு இரண்டு கால்களையும் அருகருகே வைத்து பயணிக்கும் சவுகரியமான நிலையை அளிக்கிறது. இ-ஸ்கூட்டரில் உள்ள ஃபார்வர்ட் ஸ்டான்ஸ், பயனர் இயந்திரத்தை ஒரு சீரான நிலையில் எளிதாக இயக்க அனுமதிக்கிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் IP65 சான்று பெற்றது. அட்வான்ஸ் ஃப்ளெக்ஸ் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

அப்டியே 5-ஆ மடிச்சு தூக்கிட்டு போய்டலாம்.. புது அட்வான்ஸ் இ-ஸ்கூட்டர்

இதன் 710W பீக் பவர் ஸ்கூட்டரை மேல்நோக்கி எடுத்துச் செல்ல போதுமான டார்க்கை வழங்குகிறது. ஸ்கூட்டரில் 36V/ 9.5Ah பேட்டரி உள்ளது. இந்த இ-ஸ்கூட்டரில் மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. இரவு நேர பயண பாதுகாப்பிற்காக லைஃட்டிங் சிஸ்டம் கூட இதில் வழங்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ் ஃப்ளெக்ஸ் மடிந்தால் 24.4 x 11.8 x 22.4 இன்ச் அளவில் (L x W x H) சுருங்கிவிடும்.

நார்மல் நிலையில் அட்வான்ஸ் ஃப்ளெக்ஸின் பரிமாணங்கள் 41 x 23.6 x 42.5 இன்ச் அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அட்வான்ஸ் ஃப்ளெக்ஸிற்கான பியூர் எலக்ட்ரிக் கம்பெனியின் ஆப்ஸ் ஸ்கூட்டருக்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து தகவல்களைப் பார்க்க இந்த ஆப்ஸ் அனுமதிக்கிறது.

இத்துடன் இ-ஸ்கூட்டரை டிஜிட்டல் முறையில் லாக் செய்யவும் இந்த ஆப்ஸ் உங்களை அனுமதிக்கிறது. விருது பெற்ற அட்வான்ஸ் ஃப்ளெக்ஸ், பியூர் எலக்ட்ரிக் இணையதளத்தில் "coming soon" என பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இது $1,420 டாலர் மதிப்பில் விற்பனைக்கு களமிறங்கும் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ.1,16,424 என்ற விலை புள்ளியை நெருங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Pure Electric Advance Flex Folding e-Scooter With 16 KG Weight and 39 KM Range Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X