ஸ்மார்ட்போன் செல்பி மோகத்தினால் அமிர்தசரஸில் நேர்ந்த சோகம்: இது நமக்கொரு பாடம்-வீடியோ.!

நாடுமுழுவதும் நேற்று தசரா பண்டிகையின் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டப்பட்டது. ஆனால் அமிர்தசரஸில் மட்டும் தசரா கொண்டாட்டம் துன்பத்தில் முடிவடைந்துள்ளது.

|

நாடுமுழுவதும் நேற்று தசரா பண்டிகையின் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டப்பட்டது. ஆனால் அமிர்தசரஸில் மட்டும் தசரா கொண்டாட்டம் துன்பத்தில் முடிவடைந்துள்ளது.

தசரா கொண்டாட்ட விழாவின் போது எதிர்பாராதவிதமாக 60 பேர் பலியாகியுள்ளனர்.

தசரா கொண்டாட்டம்

தசரா கொண்டாட்டம்

அமிர்தசரஸில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில், இந்தத் தசரா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் உள்ளாட்சித்துறை மந்திரி நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இராவணன் உருவத்தை எரிக்கும் நிகழ்ச்சி

இராவணன் உருவத்தை எரிக்கும் நிகழ்ச்சி

தசரா கொண்டாட்டத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக இராவணன் உருவத்தை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இராவணன் உருவத்தில் இருந்த பட்டாசுகள் வெடிக்கத் துவங்கியதும் மக்கள் கூட்டம், அந்த இடத்திலிருந்து விலகி ஓடுவதற்கு அருகிலிருந்த தண்டவாள பகுதி நோக்கிச் சென்றுவிட்டனர்.

விடியோ & செல்பி

விடியோ & செல்பி

மக்கள் அனைவரும் இராவணன் எரியும் நிகழ்வை அவர்களின் மொபைல் போன் இல் விடியோவாகவும், செல்பியாகவும் பதிவு செய்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியைப் படம் பிடிப்பதில் அதிக கவனமாக இருந்த மக்கள் இரயில் வருவதைக் கவனிக்க மறந்துவிட்டனர்.

ஜலந்தர் எக்ஸ்பிரஸ்

ஜலந்தர் எக்ஸ்பிரஸ்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்குச் செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு தண்டவாளத்திலும், அதே நேரத்தில், எதிர்த்திசையில் மற்றொரு ரயிலும், அருகிலிருந்த இன்னொரு தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. பட்டாசு சத்தத்தில் இரயில்கள் வருவதைக் கவனிக்காத மக்கள், இரண்டு ரயிலிலும் அடிபட்டுப் பலியாகினர்.

 60 பேர் பலி

60 பேர் பலி

செல்பி மற்றும் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்த மக்கள் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நிகழ்வின் பொது பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வீடியோ காட்சியில் மக்கள் அனைவரும் கையில் மொபைல் போன் வைத்தபடி நிகழ்ச்சியைப் படம்பிடிப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

 செல்பி கலாச்சாரம்

செல்பி கலாச்சாரம்

அனைவரும் இந்நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் இச்சம்பவம் நிகழ்ந்ததற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் போன்கள் மற்றும் செல்பி கலாச்சாரம் தான் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Punjab Train Mishap Footage show people taking selfies from tracks during Amritsar tragedy criticised : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X