RBI ரூல்.. ஆக.8 தான் கடைசி நாள்.. அதுக்குள்ள KYC அப்டேட் பண்ணலனா.. கஸ்டமர்களுக்கு கெடு வைத்த பிரபல வங்கி!
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதியை கடைசி நாள் ஆக குறிப்பிட்டு பிஎன்பி (PNB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) ஆனது, அதன் வாடிக்கையாளர்களுக்கான காலக்கெடு (Deadline) ஒன்றை அறிவித்து உள்ளது.
நீங்களொரு பிஎன்பி கஸ்டமர் (PNB Bank Customer) ஆக ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? பஞ்சாப் நேஷனல் வங்கி ஆனது, வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி (KYC) விவரங்களை ஆகஸ்ட் 8, 2025 க்குள் புதுப்பிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது. இந்த அப்டேட் ஜூன் 30, 2025 வரையிலான கேஒய்சி அப்டேட் செய்யாமல் நிலுவையில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த கட்டாய நடைமுறை அமலுக்கு வந்து இருப்பதாகவும், இதன்கீழ் வாடிக்கையாளர்களின் பேங்க் அக்கவுண்ட்கள் சீராக இயங்குவது உறுதி செய்யப்படும் என்றும் செய்யும் என்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆனது ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதேபோல வங்கிகள் (Banking) தொடர்பான மற்ற முக்கியமான செய்திகளை பொறுத்தவரை, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஆனது பிஏ-க்கள் (PAs) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேமண்ட் அக்ரிகேட்டர்களிடம் (Payment Aggregators) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை (UPI Transactions Charge) வசூலிக்க தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பேமண்ட் அக்ரிகேட்டர்கள் (கட்டண ஒருங்கிணைப்பாளர்கள்) என்றால் என்ன? வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு ஆன்லைன் கட்டண முறைகளை ஒரே தளத்தின் மூலம் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கும் சேவை வழங்குநர்கள் ஆவார்கள். இவர்கள் ஒரு இடைத்தரகராக செயல்பட்டு, பல பேமண்ட் கேட்வேஸ் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைத்து, கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் செயல்முறையை எளிதாக்குகிறார்கள்.
எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்? பிஏ-க்களிடம், ஐசிஐசிஐ வங்கி ஆனது தனது வங்கியின் மூலம் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் (Every UPI transaction) பரிவர்த்தனை கையாளுதல் கட்டணம் (Transaction handling fee) செலுத்த சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்கீழ் ஐசிஐசிஐ வங்கியில் எஸ்க்ரோ அக்கவுண்ட்டை (Escrow account) பராமரிக்கும் பிஏக்களுக்கு, ஐசிஐசிஐ வங்கி ஆனது ஒரு பரிவர்த்தனைக்கு 2 அபேஸிஸ் பாயிண்ட்களை (Basis Points) வசூலிக்கும், இது அதிகபட்சமாக ரூ.6 இருக்கும். எஸ்க்ரோ அக்கவுண்ட்டை பராமரிக்காத பிஏக்களுக்கு, கட்டணம் 4 பேஸிஸ் பாயிண்ட்களாக இருக்கும், அதாவது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படலாம்.
இருப்பினும், ஒரு வணிகரின் ஐசிஐசிஐ வங்கி கணக்கில், பிஏக்கள் வழியாக நேரடியாக செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு மேற்கண்ட கட்டணங்கள் பொருந்தாது என்றும் கூறப்படுகிறது. யெஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட பிற வங்கிகள், கடந்த 8 முதல் 10 மாதங்களாக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு, பேமண்ட் அக்ரிகேட்டர்களிடம் ஏற்கனவே கட்டணம் வசூலித்து வருகின்றன.
இந்த விஷயத்தில் எம்டிஆர்-க்கு எதிரான அரசாங்க விதி என்ன ஆகிற்று? யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான, எம்டிஆர் (MDR) ஆனது, அதாவது வணிக தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate) ஆனது பூஜ்ஜியமாகவே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டளையிட்டாலும், என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்டும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது வங்கிகளுக்கு ஒரு சுவிட்ச் கட்டணத்தை (Switch fee) வசூலிக்கிறது. இதனால் சில வங்கிகள் இந்த செலவை பிஏ-க்களுக்கு வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications








