உங்களுக்கு இந்த வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? இனி ATM கார்டில் இவ்வளவுதான் பணம் எடுக்க முடியும்.. ஏன்?
தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கயில்(PNB) அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. அதாவது இந்த வங்கியின் ஏடிஎம் டெபிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. அதுவும் ஏடிஎம் (ATM) கார்டுகளுக்கான தினசரி பணப் பரிவர்த்தனை வரம்பை அந்த வங்கி பாதியாகக் குறைத்துள்ளது.
இந்த புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் ஏடிஎம் கார்டு வரம்புகளை இரண்டு முக்கிய வகைகளாப் பிரித்துள்ளது. அதாவது முன்பு ரூ.1 லட்சமாக இருந்த கார்டுகளுக்கான தினசரி வரம்பு இப்போது 50,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பிரிவில் உள்ள பிரீமியம் கார்டுகளுக்கானன வரம்பு ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.75000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பஞ்சாப் நேஷன் வங்கி தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதுவும் பணம் எடுக்கும் வரம்பைக் குறைப்பது மோசடி காரணமாக வாடிக்கையாளர்கள் இழப்புகளைக் குறைக்கும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூபே NCMC பிளாட்டினம் (உள்நாட்டு மற்றும் சர்வதேச கார்டு), பலாஷ் டெபிட் கார்டு, மாஸ்டர் கார்டு பிளாட்டினம் மற்றும் ரூபே வுமன் பவர் பிளாட்டினம் டெபிட் கார்டு மற்றும் விசா கோல்ட் டெபிட் கார்டுகள் மற்றும் மாஸ்டர் கார்டு பிளாட்டினம் ரைஸ் ஆகியவை 50 சதவீத பணம் எடுக்கும் வரம்பைப் பெறும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூபே செலக்ட் டெபிட் கார்டு (நியோ மற்றும் எக்செல் வகைகள்), விசா சிக்னேச்சர் டெபிட் கார்டு, மாஸ்டர்கார்டு, விசா சிக்னேச்சர் டெபிட் கார்டு, மாஸ்டர்கார்டு பிசினஸ் டெபிட் கார்டு ஆகிய கார்டுகளில் ரூ.75000 வரை பணம் எடுக்கலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனைகள் மாற்றம் இருக்காது
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கார்டுகள் தவிர மற்ற அனைத்து ஏடிஎம் கார்டுகளுக்கும் பணம் எடுக்கும் வரம்புகள் அப்படியே இருக்கும் என்று தெரிவித்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி. அதுவும் கடைகளில் உங்கள் கார்டை ஸ்வைப் செய்வதற்கோ அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கோ பரிவர்த்தனை வரம்புகளில் எந்த குறைப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மொபைல் ஆப் வரம்பை மாற்றும் வழிமுறைகள்
குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொபைல் செயிலான PNBOne-இல் உள்நுழைந்து Services எனும் பிரிவில் கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு Debit Card பகுதியைத் திறந்து Update ATM Limit என்பதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து உங்கள் கணக்கு எண் மற்றும் டெபிட் கார்டை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது உங்கள் புதிய வரம்பை உள்ளிட்டு பரிவர்த்தனை கடவுச்சொல்லுடன் உறுதிப்படுத்த வேண்டும்.
பிஎஃப் ஏடிஎம் வசதி
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு விரைவில் பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த வசதி இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் துவக்கத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கும் வசதியும் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








