இனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..

|

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி இன்று முதல் தனது வாடிக்கையாளர்கள் Non-EMV ஏடிஎம் இயந்திரங்களிலிருந்து இனி பணம் எடுக்க அனுமதிக்காது என்று அதிரடியாக அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகளைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது.

இனி 'இந்த' ATM-ல் பணம் எடுக்க முடியாது

இனி 'இந்த' ATM-ல் பணம் எடுக்க முடியாது

பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி இனி தனது வாடிக்கையாளர்கள் Non-EMV ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பணம் எடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த தகவலைக் கேட்டு குழப்பத்திலிருந்த வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் கடுப்பை வழங்கும் மற்றொரு அறிவிப்பையும் பஞ்சாப் நேஷனல் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

செம கடுப்பில் ஏடிஎம் பயனர்கள்

செம கடுப்பில் ஏடிஎம் பயனர்கள்

பணம் எடுப்பது மட்டுமின்றி, இனி இந்த இயந்திரங்களிலிருந்து பேலன்ஸ் சரி பார்ப்பது கூடச் செய்ய முடியாது என்று வங்கி அறிவித்துள்ளது. இந்த தகவலைக் கேட்டு வாடிக்கையாளர்கள் செம கடுப்பில் இருக்கின்றனர். இனி Non-EMV ஏடிஎம் இயந்திரங்களில் எந்த சேவையையும் வாடிக்கையாளர்கள் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோசடி சிக்கல்களிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் நொடியில் LPG சிலிண்டர் புக்கிங் செய்வது தான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா? காரணம் இருக்கு..வாட்ஸ்அப் மூலம் நொடியில் LPG சிலிண்டர் புக்கிங் செய்வது தான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா? காரணம் இருக்கு..

Non-EMV ஏடிஎம் இயந்திரங்கள் என்றால் என்ன?

Non-EMV ஏடிஎம் இயந்திரங்கள் என்றால் என்ன?

Non-EMV ஏடிஎம் மூலம் நீங்கள் பணம் எடுக்கும்போது, ஏடிஎம் இயந்திரத்திலேயே உங்களின் ஏடிஎம் அட்டையை வைத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது. இன்னும் புரியும் படி எளிமையாகச் சொன்னால், உங்கள் ஏடிஎம் அட்டையை ஏடிஎம் இயந்திரத்துக்குள் ஒரு முறை சொருகி வெளியே எடுத்துவிட்டால் போதும், நீங்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த வகை ஏடிஎம்கள் தான் Non-EMV ஏடிம்கள் என்று அழைக்கப்படுகிறது. இனி இந்த இயந்திரங்களில் பணம் எடுக்க முடியாது.

EMV ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கலாம்

EMV ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கலாம்

பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவின் மற்ற வங்கிகளும் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ATM பயனர்கள் அனைவரும் EMV ஏடிஎம் இயந்திரங்களிலிருந்து வழக்கம் போல் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. EMV ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை அனைத்தும் பாதுகாப்பானது என்றும் கூறப்பட்டுள்ளது.

ரூ.10,000 கீழ் கிடைக்கும் சிறந்த அட்டகாச ஸ்மார்ட்போன்கள் பட்டியல்: 4 கேமராக்கள், 5020 mAh பேட்டரியோடு!ரூ.10,000 கீழ் கிடைக்கும் சிறந்த அட்டகாச ஸ்மார்ட்போன்கள் பட்டியல்: 4 கேமராக்கள், 5020 mAh பேட்டரியோடு!

EMV ஏடிஎம் என்றால் என்ன?

EMV ஏடிஎம் என்றால் என்ன?

முதலில் நாம் பார்த்த Non-EMV ஏடிஎம் இயந்திரத்திற்கு நேர்மாறாக செயல்படும் ஒரு இயந்திரம் தான் இந்த EMV ஏடிஎம். இந்த ஏடிஎம் மூலம் நீங்கள் பணம் எடுக்கும்போது, இயந்திரத்திலேயே உங்களின் ஏடிஎம் அட்டையை நீங்கள் வைத்திருக்க வேண்டும். உங்கள் பரிவர்த்தனை முடியும் வரை உங்களின் ஏடிஎம் அட்டை EMV ஏடிஎம் இயந்திரத்துடனே இருக்கும். பணத்தை எடுத்த பிறகே உங்களின் ஏடிஎம் கார்டை வெளியில் எடுக்க முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Punjab National Bank Customers Are Restricted To Withdraw Cash From Non-EMV ATMs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X