அரசு பள்ளி மாணவிகளுக்கு 50,000 ஸ்மார்ட்போன்கள்:அரசு அதிரடி அறிவிப்பு-எங்கு தெரியுமா?

|

ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு 50,000 ஸ்மார்ட்போன்கள் வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை

பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள்

இருப்பினும் ஏணைய பள்ளி, கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் எழுந்தும் வருகிறது. காரணம், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் எனவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்கள் இல்லாத மாணவர்கள் எப்படி வகுப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுபாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மழலையர் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஒரு நாளில் 30 நிமிடங்களுக்குள் மட்டுமே நடத்த வேண்டும். 1 - 8 வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் 9 முதல் 12 வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 4 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவி மூலமாக வகுப்பு

டிவி மூலமாக வகுப்பு

தமிழகத்தை பொருத்தவரை குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படாது என்றும் டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒரு சேனல் என்றும் 5 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

விஜய் நண்பன் பட காட்சி நிஜத்தில்: வாட்ஸ் ஆப் வீடியோகால் மூலம் பிரசவம்- நெழ்ச்சி சம்பவம்!விஜய் நண்பன் பட காட்சி நிஜத்தில்: வாட்ஸ் ஆப் வீடியோகால் மூலம் பிரசவம்- நெழ்ச்சி சம்பவம்!

50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள்

50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள்

பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்த மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட்போன்கள் இல்லாத அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாது என்பதால் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் மூலம் கல்வி

ஆன்லைன் மூலம் கல்வி

இதுகுறித்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவிக்கையில், 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. 11 ஆயிரம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவிகளுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் வழங்க தயார்நிலையில் உள்ளது எனவும் கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் மூலம் கல்வி கற்க முன்னுரிமை வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Punjab Govt announced 50,000 Smartphones for girl students of govt schools class XI & XII

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X