மாஸ் மாணவி: இனி வீடியோ கேம் மூலம் பாடம் படிக்கலாம்., வியந்து போன Microsoft Ceo சத்யா நாதெல்லா!

|

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக திகழ்கிறது என்பது ஆச்சரியம் இல்லை. இந்த நிலையில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா பிப்ரவரி 24 முதல் 26 வரை இந்தியா வந்துள்ளார்.

மைக்ரோசாப்ட் சிஇஓ முகேஷ் அம்பானி சந்திப்பு

மைக்ரோசாப்ட் சிஇஓ முகேஷ் அம்பானி சந்திப்பு

இதில் டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய தொழில்நுட்ப நகரங்களுக்கு பயணம் செய்தார் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா உடன் ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானி சந்தித்து பேசினார்.

இந்தியாவில் எதிர்காலத்தில் இது முக்கிய பங்கு

இந்தியாவில் எதிர்காலத்தில் இது முக்கிய பங்கு

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் இன்னும் பெரிய அளவில் வளர நிறைய வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார். அதோடு இந்தியாவில் இசை, சினிமா, டிவி... இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தால் கூட, அதை விட ஆன்லைன் கேமிங் பெரிய சந்தை என முகேஷ் அம்பானி சத்யா நாதெல்லாவிடம் தெரிவித்து இருக்கிறார்.

முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?

இளைஞருக்கு நன்றி சொன்ன சிஇஓ

இளைஞருக்கு நன்றி சொன்ன சிஇஓ

பெங்களூரில் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ளது மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா கலந்துகொண்டு பேசினார். அப்போது மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை கண்டுபிடித்து 21 முறை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர் சுரேஷ் செல்லதுரைக்கு நன்றி என சத்யா நாதெல்லா தெரிவித்தார்.

13 வயது மாணவி நம்யா ஜோஷி

13 வயது மாணவி நம்யா ஜோஷி

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 13 வயது மாணவி அதேபோல் பஞ்சாப் மாநிலம் லூதியானவை சேர்ந்த 13 வயது நம்யா ஜோஷிக்கும் சத்ய நாதெல்லா நன்றி தெரிவித்துள்ளார். இவர் மைக்ரோ சாப்டின் மைன்கிராப்ட் வீடியோ கேம் மற்றும் ஸ்கைப் செயலியைப் பயன்படுத்தி சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

மாநாட்டில் கலந்து கொண்ட நம்யா ஜோஷி

மாநாட்டில் கலந்து கொண்ட நம்யா ஜோஷி

இந்த நிலையில் டெல்லியில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான மாநாடு நடைபெற்றது. அதில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் நம்யா ஜோஷி என்ற மாணவியும் கலந்து கொண்டார்.

வீடியோ கேம் மூலமாக கல்வி

வீடியோ கேம் மூலமாக கல்வி

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நம்யா, தற்போதைய கால மாணவர்கள் புத்தகங்கள் வாசிப்பதற்கு படித்து அறிந்துவற்கு அவ்வளவோ விரும்பவில்லை என்றும் வீடியோ கேம் போன்ற பொழுது போக்கு அம்சங்களிலேயே மாணவர்கள் அதிக நாட்டம் செலுத்துகிறார்கள் என கூறினார்.

மைன் கிராஃப்ட் என்ற வீடியோ கேம்

மைன் கிராஃப்ட் என்ற வீடியோ கேம்

இந்த செயலின் காரணமாக மாணவர்கள் அதிக நேரம் செலவிடும் வீடியோ கேம் மூலமாகவே கல்வியை கற்றுக் கொள்ள செய்யும் முறை குறித்து நம்யா விளக்கம் அளித்தார். அதில், மைன் கிராஃப்ட் என்ற வீடியோ கேம் வழியாக வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களை எப்படி கற்றுக் கொள்ள முடியும் என விவரித்து கூறினார்.

கடன் தரமுடியாது.,அப்டியா ரைட்டு.,இங்க சிக்கன் சாப்பிட்டா கொரோனா வரும்: சிறுவன் கிளப்பிட்ட வதந்தி!கடன் தரமுடியாது.,அப்டியா ரைட்டு.,இங்க சிக்கன் சாப்பிட்டா கொரோனா வரும்: சிறுவன் கிளப்பிட்ட வதந்தி!

வியப்பில் ஆழ்த்திய விளக்கம்

வியப்பில் ஆழ்த்திய விளக்கம்

இந்த வீடியோ கேம் மூலம் பாடம் கற்பிக்கும் முறையை உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, ஸ்கைப் வழியாக கற்பித்து வருவதாக கூறினார். இந்த முறையானது அந்த மாநாட்டில் கலந்து கொண்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஏ சத்யா நாதெல்லா உட்பட பலரையும் வெகுவாக ஈர்த்தது.

Pic courtesy: Social media

Best Mobiles in India

English summary
Punjab girls new learing method via video games impresses microsoft ceo satyanadella

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X