ஹோட்டல், உணவகங்களுக்கு ரேட்டிங் கொடுத்து 13 லட்சம் திருட்டு.. 150 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மொத்தமும் போச்சு..
இந்தியாவில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் பெருகிவிட்டது. பொதுமக்களை மோசடி செய்பவர்கள் வலையில் சிக்கி, தினம்-தினம் லட்சக் கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். அந்த வகையில் மக்களை நூதன முறையில் ஏமாற்றும் மற்றொரு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஆசையை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் தினுசு தினுசாக ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். சில எளிய வேலைகளை வழங்குவதாக கூறி, அதை செய்து முடித்தவுடன் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பல நடந்து வந்தாலும், இன்னும் பல விதங்களில் ஆன்லைன் மோசடி பெருகிக்கொண்டே தான் இருக்கிறது.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஆன்லைனில் கூடுதல் பணம் சம்பாதிக்க முயன்று, ஒட்டுமொத்தமாக அவர் வங்கி கணக்கில் இருந்து மொத்தமாக 13 லட்சத்தை இழந்திருக்கிறார். இந்த புதிய சம்பவம் புனேவில் இருந்து பதிவாகியுள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும், கூடுதல் பணத்திற்காக ஆசைப்பட்டு அவர் வங்கி கணக்கில் இருந்த பணத்தை மொத்தமாக இழந்திருக்கிறார்.
இவரை அழைப்பு மூலம் தொடர்பு கொண்ட நபர், இவருக்கு பார்ட்டைம் வேலை தருவதாக கூறி, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு ஆன்லைனில் ரேட்டிங் வழங்க கூறி புதிய பணியை அவருக்கு வழங்கியிருக்கிறார். தினமும் சில உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு மதிப்பீடுகளை வழங்கினால் ஒவ்வொரு ரேட்டிங்கிற்கும் தலா 150 ரூபாய் கிடைக்கும் என்று அந்த நபர் கூறியிருக்கிறார்.
முதற்கட்டமாக, அந்த மோசடிக்காரர் வழங்கிய ஹோட்டல் ரேட்டிங் வெளியை இவர் ஆன்லைன் மூலம் செய்து முடித்திருக்கிறார். அவற்றை செய்து முடித்தவுடன், அவர் வங்கி கணக்கு விபரங்களை வாங்கிய நபர்கள், கூறியது போல அவர் செய்து முடித்த வேளைக்கு உரிய பணத்தை வழங்கி இருக்கின்றனர். ஜூலை 18 ஆம் தேதி முதல் இந்த வேலையை அந்த பெண் செய்ய துவங்கியுள்ளார்.
அவ்வப்போது அவர் செய்து முடிக்கும் வேளைக்கு ஒரு குறிப்பிட்ட சில நாள் இடைவெளிக்கு பிறகு பணம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 13 ஆம் தேதிக்கு பிறகு மோசடிக்காரர்கள் இவரை தொடர்புகொள்ளாமல் இருந்திருக்கின்றனர். அந்த பெண் அவருடைய வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய நினைத்த போது தான் அவர் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்.
அவர் வங்கி கணக்கில் இருந்த 13 லட்சமும் மொத்தமாக திருடப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் எப்படி வங்கி கணக்குடன் பாதுகாப்பாக இருந்த பணத்தை திருடினார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. பணத்தை இழந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசரனை செய்து வருகின்றனர். இதேபோன்ற மற்றொரு மோசடி வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.
வங்கி அதிகாரி போல பேசி, லாக்கர் தொகையை உடனே செலுத்த வேண்டும் என்று கூறி, ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரியை ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளது. அவரிடம் இருந்து, மோசடி கும்பல் ஒட்டுமொத்தமாக ரூ.2.37 லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார். இதேபோல், இன்னும் பல மக்கள் பல் விதங்களில் பணத்தை இழந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








