வருகிறது நேரத்தைக் குறைக்கும் ஹைபர் லூப் பாதை: 3000 கோடி முதலீடு.!

விர்ஜீன் நிறுவனம் இருக்கும் இந்த திட்டம் 140 கி.மீ. தொலைவுக்கான இப்பாதையில் 15 கி.மீ. தொலைவுக்கு முதல் கட்டப் பணிகளை தற்சமயம் துவங்க உள்ளது.

|

இந்தியாவில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதன்படி தற்சமயம் வந்த அறிவிப்பு என்னவென்றால் மும்மை-புனே இடையே போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும் ஹைபர் பாதை. மேலும் இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிறது நேரத்தைக் குறைக்கும் ஹைபர் லூப் பாதை: 3000 கோடி முதலீடு.!

குறிப்பாக மும்மை-புனே இடையே போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் இந்த ஹைபர் லூப் பாதை கொண்டுவரப்படுகிறது, இதன் முதல் கட்டமாகப் பணிகளை மேற்க்கொள்ள விர்ஜீன் என்ற நிறுவனம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 மாநில அரசு:

மாநில அரசு:

மேலும் இந்த மும்பை - புனே இடையே பயண நேரத்தைக் குறைக்கும் ஹைபர் லூப் பாதை அமைப்பதற்கான அறிவிப்பை அம்மாநிலங்கள்அரசு அண்மையில் வெளியிட்டது. இதற்காக விர்ஜீன் ஹைபர் லூப் ஒன் (Virgin Hyperloop One) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

140 கி.மீ. :

140 கி.மீ. :

விர்ஜீன் நிறுவனம் இருக்கும் இந்த திட்டம் 140 கி.மீ. தொலைவுக்கான இப்பாதையில் 15 கி.மீ. தொலைவுக்கு முதல் கட்டப் பணிகளை தற்சமயம்
துவங்க உள்ளது. மேலும் இந்தப் பணிகளுக்கு ரூ.3000 கோடி வரை செலவாகும் என புனே மெட்ரோ நகர மேம்பாட்டு அமைப்பின் அதிகாரி கிரன் கிட்டே தெரிவித்துள்ளார்.

கிரன் கிட்டே:

கிரன் கிட்டே:

இந்த ஹைபர் லூப் பாதை தொடர்பாக சோதனை மையத்தைப் பார்வையிட அமெரிக்கா சென்ற அதிகாரி கிரன் கிட்டே தெரிவித்தது என்னவென்றால் இந்த திட்டம் கண்டிப்பாக இந்தியாவுக்கு தேவைப்படும், பின்பு முதலில் மும்பை - புனே இடையில் அமைக்கும் லூப் பாதைக்கு
ரூ.3000 கோடி வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.

 கிரிக்கெட் சங்க மைதானம்:

கிரிக்கெட் சங்க மைதானம்:

தற்சமயம் இந்த திட்டத்தின் முதல் கட்ட பணி வகாட் பகுதியிலிருந்து மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் வரை நடக்கும் என்று அதிகாரி கிரன் கிட்டே அவர்கள் தெரிவித்துள்ளார்.

 25 நிமிடங்கள்:

25 நிமிடங்கள்:

ஹைபர் லூப் பாதை பயன் என்னவென்றால் மணிக்கு சுமார் 700 மைல் வேகத்தில் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ரயிலில் சென்றால் 3 மணி நேரம் ஆகும் பயண தூரத்தை வெறும் 25 நிமிடங்களில் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Pune to get Hyperloop track Virgin Hyperloop One to invest 3000 crore PMRDA to provide land : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X