FASTAG உதவியால் திருடு போன காரை கண்டுபிடித்த போலீஸ்.!

|

கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 523சுங்கவரி வசூல் மையங்களில் FASTAG (ஃபாஸ்ட்டேக்) மின்னணு அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக பணத்தை இணையம் மூலமாக செலுத்திக் கொண்டால் ஒவ்வொரு முறை சுங்கச்சாவடியை வாகனம் கடக்கும்போது டிஜிட்டல் முறையில் FASTAG மின்னணு அட்டையில் இருந்து பணம் பெறப்பட்டு,பின் கடந்து செல்ல அனுமதிக்கப்படும்.

ஃபாஸ்ட்டேக் மூறை

ஃபாஸ்ட்டேக் மூறை

மேலும் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும்போது குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரும். இதன் மூலம்நமது ஃபாஸ்ட்டேக் மின்னணு அட்டையில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். பின்பு தேவைஎன்றால் ரீசார்ஜ் செய்து கொண்டு நீண்ட நேரம் காத்திருத்தல், சில்லறை பிரச்சனை போன்றவற்றுக்கு தீர்வாகஃபாஸ்ட்டேக் மூறை இருக்கிறது.

ராஜேந்திர ஜாக்டேப்

ராஜேந்திர ஜாக்டேப்

இந்தநிலையில் ஃபாஸ்ட்டேக் முறையை கொண்டு திருடுபோன காரை சில மணி நேரங்களில் போலீசார் கண்டுபிடித்தசம்பவம் புனேவில் நடந்துள்ளது. அதன்படி புனேவில் உள்ள கர்வ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திர ஜாக்டேப். இவர்
தனது ஸ்கார்பியோ காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கிவிட்டார்.

  4.38மணிக்கு  மெசேஜ்

4.38மணிக்கு மெசேஜ்

அடுத்தநாள் அதிகாலை 4.38மணிக்கு அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் ஒன்று வந்துள்ளது, அதில் உங்கள்ஃபாஸ்ட்டேக் கணக்கில் இருந்து 35ரூபாய் தெலகான் என்ற சுங்கச்சாவடியில் கழிக்கப்பட்டது என இருந்துள்ளது. ஆனால்ராஜேந்திர ஜாக்டேப் அவர்கள் தூக்கத்தில் இருந்ததால் மெசேஜை கவனிக்கவில்லை. பின்பு காலை 5.50மணிக்கு மீண்டும் ஒரு மெசேஜ் வந்துள்ளது, அதில் உங்கள் கணக்கில் இருந்து 35ரூபாய், பன்வேல் சுங்கச்சாவடியில் கழிக்கப்பட்டதுஎன இருந்துள்ளது.

கார் காணாமல் போனது தெரியவந்தது

கார் காணாமல் போனது தெரியவந்தது

அதன்பின்பு மெசேஜை சரியாக கவனித்த ஜாக்டேப் அவர்கள் வெளியில் நிற்கும் காருக்கு எப்படி சுங்கச்சாவடியில் பணம்கழிப்பார்கள் என சந்தேகம் அடைந்துள்ளார். உடனே அவர் வெளியே சென்று பார்த்தபோது அவர் கார் காணாமல்போனது தெரியவந்தது.

 ஜிபிஎஸ் வசதி

ஜிபிஎஸ் வசதி

உடனடியாக காவல் நிலையம் சென்று தகவல் கொடுத்த ஜாக்டேப் தனது காரில் பொறுத்தப்பட்ட ஜிபிஎஸ்வசதியையும் பயன்படுத்தியுள்ளார். ஜிபிஎஸ் வசதி மற்றும் சுங்கச்சாவடி வழிகளை கொண்டு கார் சென்றுகொண்டிருக்கும்
வழியை கண்டுபிடித்த போலீசார் அந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் காவல் நிலையத்துக்கு உடனே தகவல்கொடுத்துள்ளனர்.

விசாரணை

விசாரணை

மேலும் தானே பகுதியில் கார் இருக்கிறது என்று தெரிந்துகொண்ட போலீசார் அப்பகுதியை நெருங்கியுள்ளனர். அதற்குள் காரில் இருந்த ஜிபிஎஸ்-ஐ திருடர்கள் கவனித்து துண்டித்துள்ளனர். பின்பு தானே பகுதியை சுற்றி சோதனை செய்த போலீசார் தனியாக நிறுத்தப்பட்ட காரினை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர். குறிப்பாக காரினை திருடிச்சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் என்பது குறுப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Pune: FASTag alerts, GPS help police recover stolen SUV: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X