கார்க்கில் போருக்கு பிறகு பாகிஸ்தான் செய்த சதி அம்பலம்: மோடியின்ஆவேசம்.!

ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. மேலும், 1999 முதல் தீவிரவாதிகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பட்டியிலும் இடம் பெற்றுள்ளது. நவீன

|

காஷ்மீரில் துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்களின் தீவிரவாதிகள் காரில் வெடி குண்டு நிரம்பிய வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 50 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

கார்க்கில் போருக்கு பிறகு பாகிஸ்தான் செய்த சதி அம்பலம்: மோடியின் ஆவேசம

மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பாகிஸ்தான், சீனாவை தவிர மற்ற நாடுகள் தாக்குதலுக்கு இரங்கலை தெரிவித்துள்ளளன.

ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. மேலும், 1999 முதல் தீவிரவாதிகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பட்டியிலும் இடம் பெற்றுள்ளது.

 காஷ்மீர் தாக்குதலில் 50 வீரர்கள் பலி:

காஷ்மீர் தாக்குதலில் 50 வீரர்கள் பலி:

20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பயங்கர சம்பவம் தான் இது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த (சிஆர்பிஎப்) 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் சென்றனர்.

வழியில், புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய காரை வீரர்களின் சென்று பேருந்து மீது, வெடிக்க விட்டான். இதில் 50 வீரர்கள் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதற்கு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பாகிஸ்தான் பின்னணி:

பாகிஸ்தான் பின்னணி:

சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் மீது கால்புணர்ச்சி காட்டி வருகின்றது. மேலும் கார்கில் போருக்கு பிறகு தீவிர வாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி கொடுத்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி வருவது பெரும் வேதனைக்குரியது. இந்த சதியும் தற்போது அம்பலமாகியுள்ளது.

1999 முதல் தாக்குதல் இன்று வரை தாக்குதல்கள்:

1999 முதல் தாக்குதல் இன்று வரை தாக்குதல்கள்:

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 1999ம் ஆண்டு முதல் தற்போது வரையில் பாதுகாப்பு படைகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களின் விவரங்கள்:

1999, நவ. 3 : பாதமிபாக் ராணுவ தலைமையகம் மீது நடத்தப்படட தாக்குதலில் 10 வீரர்கள் பலி

2000, ஏப். 19: முதல் முறையாக கார் வெடிகுண்டு தாக்குதல். இதில், 2 வீரர்கள் பலி.

2000, ஆக. 10: ஸ்ரீநகரில் சாலையில் நின்ற பாதுகாப்பு படை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

2001, அக், 1: ஸ்ரீநகரில் உள்ள பழைய சட்டப்பேரவை வளாகத்தின் வெளியே தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

உரி தாக்குதல்:

உரி தாக்குதல்:

2001, நவ. 17: ரம்பானில் பாதுகாப்பு படை மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

2002, மே 14: கலுசாக் ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்து 3 தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

2003, ஜூன் 28: சஜ்வான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் அதிகாரி உட்பட 12 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

2004, ஏப். 8: பாரமுல்லா மாவட்டம் உரியில், கையெறி குண்டுகளை வீசி நடத்திய தீவிரவாத தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

2005, ஜூன் 24: ஸ்ரீநகர் புறவழிச் சாலையில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

 முன்னாள் முதல்வர் வீடு  அருகே:

முன்னாள் முதல்வர் வீடு அருகே:

2005, நவ. 2: அப்போதைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையத்தின் குடியிருப்பு அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 வீரர்கள், பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

2008, ஜூலை 19: ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

2013, ஜூன் 24: ஸ்ரீநகர் ஐதர்போராவில் ஆயுதங்கள் இன்றி வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

2014, டிச. 5: உரியில் உள்ள மொக்ரா ராணுவ முகாமில் நுழைந்து 6 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

2016, ஜூன் 3: பாம்போரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 வீரர்கள் பலியானார்கள்.

 உரி தாக்குதல்கள்:

உரி தாக்குதல்கள்:

2016, ஜூன் 25: சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

2016, செப். 18: பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவ முகாமில் 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்துதான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது.

எவ்வாறு தாக்குதல் தடுக்க முடியும்:

எவ்வாறு தாக்குதல் தடுக்க முடியும்:

ராணுவ முகாம் மற்றும் குடியிருப்பு, ரோந்து செல்லும் வாகனங்களுக்கு முன்னும், வீரர்கள் செல்லும் வாகனங்களுக்கு முன் அதி நவீன கேமரா பொருத்திய டிரோன்களை உலாவிட வேண்டும். அதில் வரும் காட்சிகளை கண்காணித்து சந்தேகிக்கும் படி ஏதாவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக அங்கு சென்று எச்சரிக்கை விடுத்து தாக்குதல்களை நடத்தி அழிக்க வேண்டும்.

அந்த வகை டிரோன்களில் அதி நவீன மெட்டல் டிடெக்கர், வெடிகுண்டு அல்ட்ரா ஸ்கேனர் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.

சேட்லைட் மூலம் கண்காணிப்பு:

சேட்லைட் மூலம் கண்காணிப்பு:

இதற்காக தனி அமைப்பை உருவாக்கி சேட்லைட் மூலம் ராணுவ நிலைகள் மற்றும் செல்லும் வாகங்களையும் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். திட்டமிட்டபடி ராணுவ வாகம் செல்லும் இடம், குடியிருப்பு ராணுவ நிலைகளை கண்காணிக்க சேட்லைட் கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். மேலும் சேட்லைட் மூலம் தீவிரவாதிகள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக தாக்குதல் நடத்தி அழிக்கவும் திட்டமிட வேண்டும்.

சேட்லைட்-ஏவுகணை:

சேட்லைட்-ஏவுகணை:

சேட்லைட் மூலம் தீவிரவாதிகள் இருக்கும் இடம் தெரிந்தால், ஜிபிஎஸ் டிராக்கிங் மூலம் அவர்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த வேண்டும். சர்சைக்குரிய பகுதிகள் குறித்து அங்கு முழுமையாக சுற்றித்திரியும் வகையில் சேட்லைட் டிரோன்களையும் பறக்க விட்டு வேவு பார்க்க வேண்டும்.

மோடி ஆவேசம்:

மோடி ஆவேசம்:

இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் முழுமையாக மோடி வழங்கியுள்ளார். தீவிர வாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் ஆவேசமாகவும் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
pulwama terror attack death toll reaches 50 internet services suspended in jammu : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X