செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.!
இப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். கடந்த சில வருடங்களாக மின்சார அடுப்பு எனப்படும் இண்டக்சன் அடுப்பில் தான் அதிகளவு மக்கள் சமைக்கின்றனர்.

மின்சாரத்தின் தேவை
பின்பு மக்களுக்கு நாளுக்குநாள் மின்சாரத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே துப்பிக்கக்கூடிய வருகிறது, எனறவே புதுபிக்கக்கூடிய ஆற்றலான சூரிய மின்சக்தியை பயன்படுத்தி துவங்கி விட்டனர்.

சோலார் விங்ஸ் வடிவிலான சோலார் குக்கர்
இந்நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் குடும்பம் ஒன்ற சோலார் விங்ஸ் வடிவிலான சோலார் குக்கரில் கடந்த ஒரு வருடமாக உணவு சமைக்கிறார்கள்.இது பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயமாகவே இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

மின்கட்டணமும் குறைத்துள்ளது
இந்த சோலர் குக்கரில் சாதம், பருப்பு, போன்ற அனைத்துமே 1.5மணி நேரத்தில் சமைத்துவிடலாம் என்று கூறியுள்ளனர், மேலும் இக்குடும்பத்திற்கான மொத்த மின் தேவையையும் சோலார் பேனல்கள் மூலமாகவே பெற்றுக்கொள்கின்றனர். இதனால் மின்கட்டணமும் குறைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள மின்சாரம்
குறிப்பாக இவர்களின் பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள மின்சாரத்தினை மீண்டும் கிரிட் எனப்படும் மின்சார விநியோக அமைப்பிற்கு செலுத்தியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோலார் வாட்டர் ஹீட்டர்
அனைவரது வீடுகளிலும் சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் மின்விளக்குகள் போன்றவை செயல்பாட்டிற்கு வரத்தொடங்கி மக்களும் அதை பயன்படுத்துகின்றனர், இந்நிலையில் புதிய சோலார் குக்கர் அனைவரது கவனத்தையும் எட்ட வாய்ப்பு உள்ளது.

மின் தேவையின் அவசியம் கண்டிப்பாக குறையும்
இந்த சோலார் குக்கரை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தால் மின் தேவையின் அவசியம் கண்டிப்பாக குறையும்,பின்பு
அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக சோலார் குக்கர் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications