ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா?

|

ஆன் தி வே டிராவல் செய்யும் போது பாடல் கேட்டுக் கொண்டே பயணிப்பது வழக்கம். இல்லையென்றால் சாலை மீது கவனம் வைத்து பாதுகாப்பாக இருசக்கர வாகனத்தை ஓட்டுவது வழக்கம். ஆனால் இங்கே இருவர் 3 மணி நேர பைக் பயணத்தின் போது செல்போன்களை திருடிக் கொண்டே ஓட்டி உள்ளனர்.

பலரும் கடந்து வரும் விஷயமாக மாறும் செல்போன் திருட்டு

பலரும் கடந்து வரும் விஷயமாக மாறும் செல்போன் திருட்டு

செல்போன் திருட்டு என்பது தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் கடந்து வரும் விஷயமாக மாறி வருகிறது. இது போன்ற புகார்களும் காவல்நிலையத்தில் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சென்னையில் ஒரு நபர் அரங்கேற்றிய திருட்டு சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து சென்றவரிடம் செல்போன் திருட்டு

நடந்து சென்றவரிடம் செல்போன் திருட்டு

சென்னை தேனாம்பேட்டை பார்க் ஓட்டல் அருகே நபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே பைக்கில் வந்த இரண்டு பேர் அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். அந்த நேரத்தில் சாலையில் இருந்தவர்கள் பைக்கில் சென்ற இருவரையும் விரட்டிப் படிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் திருடர்கள் சிட்டாக தப்பி விட்டனர்.

திருடனை மடக்கி பிடித்த நபர்

திருடனை மடக்கி பிடித்த நபர்

அப்போது அந்த வழியே காரில் வந்த நபர் ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார். திருடர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் முன்பு தனது காரை மறைத்து நிறுத்தியுள்ளார். அதே நேரத்தில் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயற்சித்துள்ளனர்.

பிடிபட்ட திருடனை போலீஸில் ஒப்படைத்த மக்கள்

பிடிபட்ட திருடனை போலீஸில் ஒப்படைத்த மக்கள்

அப்போது ஒரு திருடன் மட்டும் சாமர்த்தியமாக தப்பி ஓடி விட்டான். ஆனால் மற்ற ஒருவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபரை பொதுமக்கள் சாமர்த்தியமாக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திருவொற்றியூர் முதல் தேனாம்பேட்டை வரை மூன்று மணி நேர பயணம்

திருவொற்றியூர் முதல் தேனாம்பேட்டை வரை மூன்று மணி நேர பயணம்

இந்த விசாரணையில், பிடிபட்ட நபர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. மேலும், திருவொற்றியூர் முதல் தேனாம்பேட்டை வரை மூன்று மணி நேரத்தில் 18 செல்போன்களை அவர்கள் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விலை அதிகமான செல்போன்களை குறிவைத்து திருட்டு

விலை அதிகமான செல்போன்களை குறிவைத்து திருட்டு

இவர்கள் விலை அதிகமான செல்போன்களை திருடி, அந்த செல்போன்களை குறைந்த விலைக்கு விற்று சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, திருடியவுடன் வேகமாக செல்லும் அளவிற்கு விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை வாங்கி செல்போன் திருட்டுக்கு பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ஒருவர் மட்டுமே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால், தப்பிச்சென்ற மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நமது பொருள் நமது கவனம்

நமது பொருள் நமது கவனம்

ஆனால் என்ன தான் போலீஸார் துரிதமாக செயல்பட்டாலும் நமது பொருளை நாம்தான் கவனமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பது முக்கியம். அதுவும் செல்போன் என்பது நமது பல சுய விவரங்கள் அதில் இருக்கும் எனவே கவனமாக அதை கையாளவேண்டும்.

File images

Best Mobiles in India

English summary
Public handed the thief over to the police who stole 18 mobiles with in 18 hours

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X