பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதாக தகவல்? முழு விவரம்.!

|

கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தொடர்ந்து தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை டிவியிலும், மொபைல்போனிலும் செலவிட்டனர். ஸ்மார்ட்போன்களில் PUBG விளையாட்டு பிரதானமாக இருந்துள்ளது.

ளையாடுவதில் ஏணையோர் தங்களது

பப்ஜி விளையாடுவதில் ஏணையோர் தங்களது நேரத்தை செலவிட்டனர். வீட்டுக்குள் அமர்ந்துக் கொண்டோ அல்லது நண்பர்களோடு அமர்ந்து கொண்டோ திடீரென ஒருவர் அவனை சுடு மெடிகிட் கொண்டுவா அப்படி இப்படி என காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கத்தும் நிகழ்வையும் நாம் பார்த்திருப்போம்.

ஏணையோர் மன உளைச்சலுக்கு

பப்ஜி விளையாட்டில் பலரும் தங்களை அடிமைப்படுத்தி கொண்டார்கள். இதையடுத்து அந்த விளையாட்டு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்பட்டது. இதில் நேரத்தை செலவிட்டு வந்த சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. பப்ஜியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குறிப்பாக பெற்றோர்கள் கோரிக்கைகளை முன்னிருத்தி வந்தனர். எனவே கடந்த மாதம் பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. பப்ஜி தடையால் ஏணையோர் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.! இனி எப்போதும் மியூட்.!வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.! இனி எப்போதும் மியூட்.!

பப்ஜி மொபைல் கேமிற்கு

தற்சமயம் இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீங்கலாம் என இணையதளத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் இணை மேலாளர் பணிக்கு ஆட்களை தேடுவதாக லின்க்டு-இன் தளத்தில்பதிவிட்டு இருக்கிறது.

 மொபைல் கேமிற்

எனவே இதன் காரணமாக பப்ஜி மொபைல் கேமிற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை விரைவில் நீங்க வாய்ப்புகள் இருப்பதாக இணையதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விவரங்களின் படி,

மேலும் பப்ஜி வெளியிட்ட விவரங்களின் படி, கார்ப்பரேட் டெவலப்மென்ட் பிரிவு மேலாளர் பதிவிக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்வதாக தெரிவித்து இருக்கிறது. இந்த பதவியில் இருப்பவர் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையிலான முதலீடு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல் உள்ளிட்டவைகளை மேற்கொள்வார்.

பணியில் சேர்பவர்

அதேபோல் இந்த பணியில் சேர்பவர் இந்தியாவுக்கான கட்டமைப்பு பணிகளை தென் கொரியாவில் செயல்படும் கிராப்டன் தலைமையத்தின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

அலுவலகத்திற்கு

குறிப்பாக பப்ஜி இந்திய அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருப்பதால், விரைவில் பப்ஜி மொபைல் இந்தியாவில் வெளியாகலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். எனினும் லின்க்டு இன் பதிவில் பப்ஜி பரிவுக்கே ஆட்கள் தேவை என பதிவிட்டு இருக்கிறது.

 மாத துவகத்தில் பப்ஜி

மத்திய அரசு கடந்த மாத துவகத்தில் பப்ஜி மொபைல் கேமிற்கு மட்டும் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த கேம் தொடர்ந்து கணினி மற்றும் கேமிங் கன்சோல்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
PUBG Unban? PUBG Corp Is Hiring In India, According to a LinkedIn Post and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X