Pubg அட்ராசிட்டி: ரூ.1 லட்சம் பரிசு டோர்னமன்ட் ரத்து., காரணம் அவங்க தான்: ஏமாற்றத்தில் வீரர்கள்!

|

நாடு முழுவதும் பப்ஜி விளையாட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும், அதன்படி உலகம் முழுவதும் இந்த விளையாட்டு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி விளையாட்டு அதிகம் கவர்ந்துள்ளது.

ரூ.1.லட்சம் முதல் பரிசு

ரூ.1.லட்சம் முதல் பரிசு

மேலும் சிறுவர் மற்றும் இளைஞர்களை பெரிதளவு சீரழிக்கும் இந்த ஆன்லைன் பப்ஜி கேம்-ஐ சமூக ஆர்வலர்கள் தடை செய்ய வலியுறுத்தி வரும் நிலையில் ரூ.1.லட்சம் முதல் பரிசுடன் காரைக்குடி அருகே போட்டி நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.

சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

இந்த போட்டியினால் சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த பப்ஜி கேமிற்கு அடிமையாக உள்ளனர். இந்த விளையாட்டை மொபைலில் விளையாடலாம் என்பதால் இரவு, பகல் என பாராமல் சாப்பிடாமல் விளையாடிக் கொண்டே தான் இருக்கின்றனர்.

Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்

விளையாட்டில் மூழ்கிய ப்ளேயர்கள்

விளையாட்டில் மூழ்கிய ப்ளேயர்கள்

இந்த பப்ஜி விளையாட்டை விளையாட விடாமல் பெற்றோர் தடுத்ததால் சிறுவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் அண்மையில் வெளிவந்தது, மேலும் மாணவவர்கள் பலர் பள்ளி,கல்லூரிக்கு செல்லாமல் இந்த விளையாட்டில் மூழ்கினர்.

6மணி நேரம் மட்டுமே விளையாட முடியும்

6மணி நேரம் மட்டுமே விளையாட முடியும்

சில மாதங்களுக்கு முன்பு இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர், இதையடுத்து பப்ஜி கேம்-ஐ ஒரு நாளைக்கு 6மணி நேரம் மட்டுமே விளையாட முடியும் என்ற வரையரையை அரசு கொண்டு வந்தது.

தேர் திருவிழாவையொட்டி பப்ஜி போட்டி

தேர் திருவிழாவையொட்டி பப்ஜி போட்டி

இருப்பினும் இந்த விளையாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர், இந்த நிலையில் காரைக்குடி அருகே கல்லலில் மாசி மாத தேர் திருவிழாவையொட்டி தனியார் மொபைல் கடை சார்பில் பப்ஜி கேம் அறிவிக்கப்பட்டது.

ரூ.318-திட்டத்தில் டேட்டா சலுகையை அள்ளிவீசிய பிஎஸ்என்எல்.! தினசரி 2ஜிபி டேட்டா.! வேலிடிட்டி?ரூ.318-திட்டத்தில் டேட்டா சலுகையை அள்ளிவீசிய பிஎஸ்என்எல்.! தினசரி 2ஜிபி டேட்டா.! வேலிடிட்டி?

பரிசுத் தொகை அறிவிப்பு

பரிசுத் தொகை அறிவிப்பு

அதன்படி அறிவிக்கப்பட்ட இந்த போட்டி மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்றும், இதில் முதல் பரிசாக 1லட்சமும், 2-ம் பரிசாக ரூ.50ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.20ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழுவில் 4பேர் இடம்பெறலாம்

ஒரு குழுவில் 4பேர் இடம்பெறலாம்

குறிப்பாக இந்த போட்டிக்கு 25குழுக்கள் அனுமதிக்கப்படுவர் எனவும், ஒரு குழுவில் 4பேர் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை ஆயிரத்திற்கும் மேறபட்டோர் ஆன்லைனில் பதிவு செய்தனர்.

ரூ.300 கட்டணமாக வசூலிப்பு

ரூ.300 கட்டணமாக வசூலிப்பு

ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகிறன்றனர் என்றும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பப்ஜி போட்டி நடத்தப்படுகிறது எனத் தெரிவித்தனர். மேலும் இந்த போட்டியின்போது ஆன்லைன் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் எனவும் கூறினர். இந்த போட்டியில் ஒரு குழவிற்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கிறோம் என்று தெரிவித்தனர். ஆனாலும் இந்த போட்டிக்கு சமூக ஆர்வலர்கள் பலவிதமான கருத்துக்களை கூறிவந்தனர்.

 போட்டிக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

போட்டிக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

இந்நிலையில், இளைஞர்களை அடிமையாக்கி அவர்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு கொண்டு போய் விடும் ஆபத்தான பப்ஜி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ள இந்த விளையாட்டுப் போட்டியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

போட்டியை ரத்து செய்த குழுவினர்

போட்டியை ரத்து செய்த குழுவினர்

இதனால், மாவட்ட ஆட்சியரகம் மற்றும் போலீஸாரிடம் தரப்பிலிருந்து, இந்த விளையாட்டுப் போட்டி குறித்து தங்களிடம் அனுமதி எதுவும் பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடும் எதிர்ப்பு காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இடி., மார்ச் 1 முதல் அந்த வங்கி ஏடிஎம்களில் ரூ.2000 போடவும் முடியாது., எடுக்கவும் முடியாது!

பெற்றோர்கள் மற்றும் சமூகஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பு

பெற்றோர்கள் மற்றும் சமூகஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பு

மேலும் இதில் பப்ஜி போட்டிக்கு இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்து வந்தாலும். பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருப்பதால் இந்த போட்டி ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளனர். இதனால் இந்த போட்டியை எதிர்நோக்கி ஆர்வமாக இருந்தவர்களும், ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Pubg tournament cancelled in tamilnadu: do you know the reason?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X