Home
News

பப்ஜி விளையாட்டால் நடைபெற்ற விபரீதம்: இரண்டு சிறுவர்கள் காணவில்லை.!

கோவை அருகே இருக்கும் சூலூர் விமானப்படை தளத்தில் உதவி விங் கமாண்டர் பொறுப்பில் இருக்கும் விவேக் சிங்கும், பல்தேவும் நண்பர்கள். இருவரது குடும்பத்தினரும் சூலார் விமான தள விடுதியில் அருககே உள்ள குடியிருப்பில் தான் வசித்து வருகின்றனர்.

பப்ஜி விளையாட்டு

பப்ஜி விளையாட்டு

விவேக் சிற் மகன் கீத்லு பல்தேவ் தத்தானியா மற்றும் பல்தேவ் மகன் வருண் சிங் ரத்தோர் ஆகிய இருவரும் அருகில்உள்ள விமானப்படை பள்ளியில் 9-ம் வருப்பு படித்து வந்துள்ளனர். குறிப்பாக இவர்கள் இருவரும் அதிக நேரம் ஸ்மார்ட்போனில் பப்ஜி விளையாடுவதை வழக்கமாகவைத்துள்ளனர்.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இவர்கள் இருவரும் விடிய விடிய விளையாடும்அளவுக்கு தீவரிம் காட்டியுள்ளனர். மேலும் பப்ஜி விளையாட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும்கவர்ந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

பள்ளிக்குள் செல்லாமல் வெளியே சென்றுள்ளனர்

பள்ளிக்குள் செல்லாமல் வெளியே சென்றுள்ளனர்

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவரும் மாயமாகினர், இது குறித்து பள்ளியில்விசாரித்த போது அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியிவந்தது. மேலும் பப்ஜி விளையாடிய மாணவர்களை
பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் வியாக்கிழமை காலையில் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்ட நண்பர்கள்இருவரும் பள்ளிக்குள் செல்லாமல், வெளியே சென்றுள்ளனர், அது அங்குள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 சூலூர் போலீசார்

சூலூர் போலீசார்

மேலும் மாணவன் வருண் சிங் ரத்தோர் தனது வீட்டில் இருந்து 4000ரூபாய் எடுத்துசென்றுள்ளான் என தெரியவந்துள்ளது,இது குறித்து சூலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சூலூர் போலீசார் இந்த மாணவர்களைதேடிவருகின்றனர்.

லாகின் செய்து விளையாடி வருவதைக் கண்டு பிடித்துள்ளனர்

லாகின் செய்து விளையாடி வருவதைக் கண்டு பிடித்துள்ளனர்

பின்பு இந்த இரண்டு சிறுவர்களும் காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள சைக்கிள் கடைகளுக்கு சென்று சைக்கிள் செயினை சரி செய்து விட்டு சென்று இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக விமானப்படை வீரர்கள் தங்கள் அலுவலக அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒத்துழைப்புடன் மாயமான தங்கள் மகன்களை அனைத்து இடங்களிலும் தேடிவந்துள்ளனர், மேலும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் காணாமல் போன இரு மாணவர்களும் மீண்டும் பப்ஜி விளையாட்டை லாகின் செய்து விளையாடி வருவதைக் கண்டு பிடித்துள்ளனர்.

காவல்துறையினர் மாயமான மாணவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து இடங்களிலும் தேடிவருகின்றனர்.பப்ஜி விளையாட்டில் நேரம் செல்லச் செல்ல, விளையாடுபவரின் மேப் சிறிதாகிக் கொண்டே சென்று, அடுத்த இடத்திற்கு வெளியேறச் சொல்லி உத்தரவிடும். எனவே அந்தவகையிலும் இருவரும் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனரா என விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர்ப்பது மிகவும் நல்லது

தவிர்ப்பது மிகவும் நல்லது

ஸ்மார்ட்போன்களில் வரும் விளையாட்டுகள் அனைத்தும் சிறுவர்களை அதிகளவில் அடிமைப்படுத்தி கண்களின் பார்வத்திறனை இழக்க செயயும். எனவே சிறுவர்களுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Best Mobiles in India

English summary
Pubg Playing Two School Boys Went Missing In India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X