பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்

|

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு கேம் பெரும்பாலானோரை அடிமையாக்கி கொண்டே இருக்கிறது. கிளாஸ் ஆஃப் கிளான்ஸ் சமீபத்தில் பெரும்பாலானோரை அடிமையாக்கி தன் வசம் பிடித்து வைத்திருந்தது.

பப்ஜி கேம் விளையாட்டு

பப்ஜி கேம் விளையாட்டு

கிளாஸ் ஆஃப் கிளான்ஸ் கேமில் இருந்து மீட்டெடுக்க கதாநாயகனாக களமிறங்கியது பப்ஜி, போர்முறை விளையாட்டான இந்த கேம் நீங்கள் விளையாடாமல் கூட இருக்கலாம். ஆனால் பப்ஜி விளையாடுபவர்களை கடக்காமல் நம் வாழ்க்கை பயணித்திருக்காது.

பப்ஜியன்ஸ் எனப்படும் பப்ஜி வாதிகள்

பப்ஜியன்ஸ் எனப்படும் பப்ஜி வாதிகள்

திடீரென அருகில் உருவர் டேய் அவன சுட்றா., எனக்கு மெடிக்கல் கிட் எடுத்துட்டு வா என்னை சுட்டுட்டாங்க., உன்ட என்ன துப்பாக்கி இருக்கு அப்படி இப்படினு ஒரு பயங்கரவாதி போல் பேசிக் கொண்டிருப்பார்கள். கேமில் சிறிது நேரம் கழிந்தவுடன் சத்தம் அதிகமாகும்., அவர்கள் அருகில் செல்லவே பயமாக இருக்கும் அவர்கள் தான் பப்ஜியன்ஸ் எனப்படும் பப்ஜி கேம் வாதிகள்.

கேமராவுக்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்கேமராவுக்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்

தண்ணீருக்கு பதிலாக கெமிக்கல்

தண்ணீருக்கு பதிலாக கெமிக்கல்

பயங்கரவாதிகளுக்கு பதிலாக பப்ஜிவாதிகளாக மாற்றும் இந்த கேம்மில் பலரும் அடிமையாக இருக்கிறார்கள். இந்த கேமில் அடிமையாக்கி மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அதேபோல் பப்ஜி விளையாட்டை ஆர்வமாக கொண்ட ஒரு இளைஞர் தண்ணீருக்கு பதிலாக தவறுதலாக கெமிக்கலைக் குடித்து உயரிழந்துள்ளார்.

ரயில் பயணத்தில் கெமிக்கல் குடித்த இளைஞர்

ரயில் பயணத்தில் கெமிக்கல் குடித்த இளைஞர்

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் சவுராப் யாதவ். இவர் தனது நண்பர் சந்தோஷ் சர்மாவுடன் குவாலியரில் இருந்து ஆக்ராவுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். சவுராப்பின் நண்பன் சந்தோஷ் சர்மா நகை தொழில் செய்பவர் என்பதால் நகைகளை சுத்தம் செய்யும் கெமிக்கலை தன் பையில் வைத்திருந்துள்ளார்.

விளையாட்டு ஆர்வம் கண்ணை மறைத்துவிட்டது

விளையாட்டு ஆர்வம் கண்ணை மறைத்துவிட்டது

சவுராப், ரயில் பயணத்தின்போது தன்னுடைய மொபைல் போனில் பப்ஜி விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது தண்ணீர் தாகம் எடுத்த நிலையில், பப்ஜி கேம் விளையாடிக் கொண்டே சந்தோஷ் சர்மா பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுப்பதற்கு பதிலாக கெமிக்கல் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார்.

"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு": பாஜக எம்.பி.,

 பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

கெமிக்கல் பாட்டிலை எடுத்து குடித்தவுடன் மயங்கி விழுந்த சவுராப். அடுத்த ரயில் நிலையம் செல்வதற்குள் உயிரிழந்துவிட்டார். மேலும் சவுராப்பின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்விற்கு பிறகு முழுமையான தகவல்கள் வெளிவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Pubg player dies who drinks chemical instead of water

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X