Home
News

பப்ஜி கேம் மூலம் திருமணம் செய்யும் பப்ஜி காதல் ஜோடி.! உண்மையான சிக்கன் டின்னர் இதான்.!

காதலர் தினத்தை முன்னிட்டு பப்ஜி கேம் மூலம் நிகழ்ந்துள்ள இந்தக் காதல் கதை தற்பொழுது வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு பப்ஜி கேம் மூலம் நிகழ்ந்துள்ள இந்தக் காதல் கதை தற்பொழுது வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. கேமிங் சந்தையில் முன்னிலையில் உள்ள பப்ஜி மொபைல் கேம் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றது.

முக்கியமாக பப்ஜி விளையாடும் பப்ஜி பிளேயர்கள் இந்த கேமிற்கு அடிமையாகி வருவதாகவும், குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

பப்ஜி கேம் தடை

பப்ஜி கேம் தடை

குஜராத் அரசு, பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகள் பப்ஜி கேம் விளையாடுவதற்குத் தடை வழங்கியுள்ளது. பப்ஜி கேம் ஆர்வத்தினால் குழந்தைகள் அடிமையாகி, படிப்பில் கவன குறைவு ஏற்படுவதுடன் இன்னும் பல மனநல பிரச்சனைக்கும் காரணமாக இருக்கிறது என்பதனால் தடை விதிக்கப்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ளது.

பப்ஜி லவ்

பப்ஜி லவ்

இப்படிப் பல குறைகள் மட்டுமே கூறப்பட்டு வந்த பப்ஜி கேமிற்கு தற்பொழுது ஒரு புகழ் கிடைத்துள்ளது. விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்க வேண்டும், கேமிற்கு அடிமையாகாமல் காதலுக்கு அடிமையாகுங்கள் என்று சொல்லும்படி இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.

காதல் கூப்பிடாக மாறிய பப்ஜி

காதல் கூப்பிடாக மாறிய பப்ஜி

நௌர்ஹான் அழ் ஹஷீஷ் என்ற பப்ஜி விளையாட்டு வீரர், பப்ஜி கேம் மூலம் பழகி, காதல் வயப்பட்டு திருமணம் வரை சென்றுள்ளார். பப்ஜி கேம் காதல் கூப்பிடாக (Cupid ) செயல்பட்டு தங்களை காதல் ஜோடியாக மாற்றியுள்ளதாக அவரின் டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் டிவீட்

டிவிட்டர் டிவீட்

இந்த பப்ஜி காதல் ஜோடிக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. பப்ஜி காதல் ஜோடி அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படத்தை "Started from PUBG, now we are here" என்ற டேக் உடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அதிகம் லைக் செய்யப்பட்ட டிவீட் இவர்களின் டிவீட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதலர் தின வாழ்த்து

காதலர் தின வாழ்த்து

இதுவரை இந்தப் பதிவிற்கு 14,000 லைக்கள் வழங்கப்பட்டுள்ளது. பப்ஜி கேமிற்குள் ஏர் டிராப் தேடி சுற்றி திரியும் சிங்கிள்ஸ்களே, முடிந்தால் நீங்களும் பப்ஜி மூலம் காதல் வயப்பட்டு உண்மையான சிக்கன் டின்னரை உங்கள் காதலியுடன் கொண்டாட, காதலர் தின வாழ்த்துடன் வாழ்த்துகிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
PUBG Mobile Valentine's Day special Couple gets married after finding each other on PUBG Mobile game : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X