Home
News

PUBG இந்தியா வெளியீட்டு தேதி இதுவா?- குதூகலத்தில் ரசிகர்கள்., புகுந்து விளையாடலாமா?

இந்தியா கேம் பிரியர்களிடையே மிகவும் பிரபலமைந்த ஒன்று பப்ஜி. இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்ட நாளில் இருந்து இந்த விளையாட்டை மீண்டும் இந்தியாவில் கொண்டுவர நிறுவனம் சார்பில் ஏணைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விளையாட்டு இன்று (நவம்பர் 20) அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அதே சமயத்தில் சிறு தாமதமாகும் எனவும் கூறப்படுகிறது.

பப்ஜி மீண்டும் அறிமுகம் செய்யும் தேதி

பப்ஜி மீண்டும் அறிமுகம் செய்யும் தேதி

பப்ஜி கார்ப்பரேஷன் தரப்பில் இருந்து மீண்டும் அறிமுகம் செய்யும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும் இன்று (நவம்பர் 20) இந்தியாவில் அறிமுகமாகும் என பல வதந்திகள் பரவியுள்ளன. இதுவரை பப்ஜி கார்ப்பரேஷன் அல்லது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்த எந்த தகவலும் வரவில்லை.

பப்ஜி மொபைல் இந்தியா

பப்ஜி மொபைல் இந்தியா

பப்ஜி மொபைல் இந்தியாவில் சந்தைப்படுத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து பல டீசர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டது. அதில் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. டீசர் நாளை வெளியாகப்போகிறது எனவும் நவம்பர் 20 ஆம் தேதிக்கு முன்பு இந்த விளையாட்டு வெளியிடப்படும் எனவும் கருதப்பட்டது.

நிறுவனம் சார்பில் அறிமுக தேதி குறித்த தகவல் இல்லை

நிறுவனம் சார்பில் அறிமுக தேதி குறித்த தகவல் இல்லை

இருப்பினும் இதுவரை எந்த ஒரு டீசரும் நாட்டில் எப்போது இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. பப்ஜி மொபைல் இந்தியா பதிப்புக்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பப்ஜி மொபைல் மீண்டும் எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் பப்ஜிக்கான முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன் பதிவுகள் குறித்த தகவல்

முன் பதிவுகள் குறித்த தகவல்

பப்ஜிக்கான முன்பதிவு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைப்பதாக டேப்டாப் அறிகுறிகள் தெரிவிக்கிறது. விரைவில் தொடங்கவிருக்கும் மொபைல் கேம்களுக்கான முன் பதிவுகளை எடுக்கும் இந்த தளம், முன்னதாகவே PUBG மொபைல் இந்தியாவுக்காக 200,000 க்கும் மேற்பட்ட முன் பதிவுகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் தொடங்கப்படக்கூடும் என்பதற்கான அறிகுறி

மீண்டும் தொடங்கப்படக்கூடும் என்பதற்கான அறிகுறி

விளையாட்டிற்கான முன்பதிவு செய்யப்பட இருந்தால் பப்ஜி மொபைல் இந்தியா பேஸ்புக் மற்றும் யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தை அணுகலாம் என கூறப்படுகிறது. இந்த அணுகுமுறை தற்போது மூடப்பட்ட நிலையில் இருந்தாலும் இந்த விளையாட்டை மீண்டும் தொடங்கப்படக்கூடும் என்பதற்கான மற்றொரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

50 மில்லியன் பயனர்கள்

50 மில்லியன் பயனர்கள்

இந்தியாவில் மட்டும் இந்த கேமை சுமார் 50 மில்லியனுக்கு அதிகமானோர் விளையாடி வந்தனர், சீனாவுடனான மோதல் காரணமாக இந்தியா சீன பயன்பாடுகளைத் தடை செய்தது. அந்த வரிசையில் பப்ஜி கேமும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்த தடைக்குப் பின்னர் தற்போது பப்ஜி கேமிங் நிறுவனம், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் ரத்து செய்து இந்தியாவில் தனித்துச் செயல்பட முன்வந்துள்ளது.

சீன உறவு ரத்து

சீன உறவு ரத்து

அதிக பயனர்களைக் கொண்ட பப்ஜி செயலியை இந்தியாவில் நிலைப்படுத்த, தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன் தற்போது அதன் சீன உறவை ரத்து செய்து, இந்தியாவில் ஒரு நிறுவனத்தை அமைத்துத் தனித்துச் செயல்படப் போவதாக அறிவித்தது. இந்தியாவுக்கான பப்ஜியின் புதிய வெர்ஷன் விரைவில் வெளியாகும் என்ற தகவல்கள் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது.

புதிய பப்ஜி அறிமுகம்

புதிய பப்ஜி அறிமுகம்

இந்தப் புதிய பப்ஜி இந்திய வெர்ஷனில் டென்செண்டின் தலையீடு இருக்காது என்றும், முழுக்க முழுக்க தென் கொரியாவை சேர்ந்த பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் மட்டுமே இதை கையாளும் என்றும் உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
PUBG Mobile Coming Back to India: Release Date and Other Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X