17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் பலி! எப்படித் தெரியுமா?

|

பப்ஜி விளையாடக் கூடாது என்று தாய் கண்டித்துத் திட்டியதால், விரக்தியில் மனமுடைந்த 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் துன்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் பலி! எப்படித் தெரியுமா?

ஹரியானாவின் ஜிண்ட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கி அதற்கு அடிமையாகியுள்ளான், 10 ஆம் வகுப்பு படிப்பையும் பாதியில் கைவிட்ட இந்த சிறுவன், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போக அவனது பெற்றோர் அந்த சிறுவனைக் கண்டித்து வந்துள்ளனர்.

17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் பலி! எப்படித் தெரியுமா?

படிப்பில் கவனம் இல்லாமல் நாள் முழுதும் பப்ஜி கேம் விளையாடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த அந்த சிறுவனின் நடவடிக்கைகள் பெற்றோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரச் சிறுவனின் பெற்றோர் அவனைக் கண்டிக்க துவங்கி இருக்கின்றனர்.

17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் பலி! எப்படித் தெரியுமா?

காவல்துறை அதிகாரியான சிறுவனின் தந்தையும் சிறுவனிடம் பல முறை படிப்பில் கவனம் செலுத்தும்படி தெரிவித்திருக்கிறார். இருப்பினும் சிறுவன் கேட்காமல் கேம் விளையாடுவதையே தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். ஆத்திரம் அடைந்த சிறுவனின் தாய் அவனைத் திட்டி கேம் விளையாட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

தொடர்ச்சியாக கேம் விளையாடிய சிறுவனைக் கண்டித்து ஸ்மார்ட்போனையும் பிடுங்கி வைத்து, இனிமேல் பப்ஜி விளையாடக் கூடாதென்று கண்டித்துள்ளனர். மனம் உடைந்த சிறுவனம் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். மொபைல் கேமிற்காக சிறுவன் உயிரைவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
PUBG Mobile Addiction kills 17 Year Old Boy : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X