பரிசுகளோடு பப்ஜி இந்தியா அறிமுகமாகிறதா?- வெளியான தகவல்கள்!

|

பப்ஜி இந்தியா விளையாட்டு அறிமுகமாகும் போது அதை பதிவிறக்கம் செய்து விளையாடுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபலமான கேம்களில் ஒன்று பப்ஜி

பிரபலமான கேம்களில் ஒன்று பப்ஜி

இந்தியா கேம் பிரியர்களிடையே மிகவும் பிரபலமைந்த ஒன்று பப்ஜி. இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்ட நாளில் இருந்து இந்த விளையாட்டை மீண்டும் இந்தியாவில் கொண்டுவர நிறுவனம் சார்பில் ஏணைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியா

பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியா

பப்ஜி கார்ப்பரேஷன் தரப்பில் இருந்து மீண்டும் அறிமுகம் செய்யும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பப்ஜி மொபைல் இந்தியாவில் சந்தைப்படுத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து பல டீசர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டது. அதில் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிமுகமாகும் தேதி குறித்த தகவல் இல்லை

அறிமுகமாகும் தேதி குறித்த தகவல் இல்லை

இருப்பினும் இதுவரை எந்த ஒரு டீசரும் நாட்டில் எப்போது இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. பப்ஜி மொபைல் இந்தியா பதிப்புக்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. பப்ஜி மொபைல் மீண்டும் எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பரிசுகள் வழங்கப்படும் என தகவல்

பரிசுகள் வழங்கப்படும் என தகவல்

இந்தநிலையில் பப்ஜி அறிமுகத்திற்கு முன்னதாக பல இணைய ஆய்வாளர்கள் மற்றும் யூடியூப் ஆய்வாளர்கள், பப்ஜி இந்தியாவில் மீண்டும் வரும் போது பரிசுகள் வழங்கும் என தெரிவிக்கின்றனர். இதை உலகளாவிய பப்ஜி பீட்டா பதிப்பினுள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. பப்ஜி மொபைல் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடும் அனைத்து பயனர்களுக்கும் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை

அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை

இந்த பரிசானது ரிவார்ட் க்ரேட் ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதில் அனார்கரி செட் மற்றும் க்ளாசிக் க்ரேட் கூப்பன் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் பப்ஜி மொபைல் உலகளாவிய பீட்டா பதிப்பில் மட்டுமே தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசுகள் அறிமுகத்தின் போது மாற்றப்பட வாய்ப்புள்ளது. இது அதிகாரப்பூர்வ தகவலாக இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. விளையாட்டின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி இன்னும் வெளியாகவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Pubg India Return: May Launching With Prize to Users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X