மன உளைச்சலில் பப்ஜி வீரர்கள்: கவலை வேண்டாம்., இதோ மாற்று விளையாட்டு இருக்கே!

|

நாட்டில் பிரபல விளையாட்டான PUBG தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களிடையே பேரிடியாக விழுந்தது. இந்த நிலையில் பப்ஜிக்கான மாற்று விளையாட்டு குறித்து பார்க்கலாம்.

புதிதாக 118  செயலிகளுக்கு தடை

புதிதாக 118 செயலிகளுக்கு தடை

சீனாவுடனான எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் பப்ஜி உட்பட புதிதாக 118 செயலிகளுக்கு தடை விதிப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிக்கை குறித்து பார்க்கையில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

PUBG உட்பட 118 மொபைல் செயலிகள்

PUBG உட்பட 118 மொபைல் செயலிகள்

பிரபல விளையாட்டான PUBG உட்பட 118 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் நலன்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி ரசிகர்கள் வருத்தம்

பப்ஜி ரசிகர்கள் வருத்தம்

பப்ஜி நாட்டின் பிரதான மொபைல் கேம்களில் ஒன்றாகும், இந்த விளையாட்டிற்கென இருக்கும் ரசிகர்கள் ஏராளம் இந்த விளையாட்டு 175 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கங்கள் செய்திருந்தனர். இந்த நிலையில் பப்ஜி தடை என்பது பலரையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில் பப்ஜிக்கான மாற்று விளையாட்டு குறித்து பார்க்கலாம்.

Google எச்சரிக்கை! இந்த 6 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்! மீண்டும் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்!Google எச்சரிக்கை! இந்த 6 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்! மீண்டும் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்!

கரேனா ஃப்ரீ ஃபயர்

கரேனா ஃப்ரீ ஃபயர்

பப்ஜி மொபைல் கேமை போலவே இதுவும் ஒரு சிறந்த கேம் ஆகும். பப்ஜி இருக்கும் போதே இந்த விளையாட்டு பலரிடம் பிரபலமடைந்தது. இந்த விளையாட்டில் எளிதான திருத்தம் மற்றும் சேமிப்பு காரணமாக பப்ஜி போன்றே இது ஒரு சிறந்த விளையாட்டாகும்.

கால் ஆஃப் டுயூட்டி

கால் ஆஃப் டுயூட்டி

கால் ஆஃப் டுயூட்டி விளையாட்டு பலரிடமும் பிரபலமடைந்த ஒன்றாகும். இந்த விளையாட்டானது முதல் எஃப்பிஎஸ் விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த விளையாட்டின் பைல் 10 ஆண்டுகளுக்கு முன்பே பாரம்பரிய பையில்களை கொண்டுள்ளது. இதன் கிராபிக்ஸ் பிரமாண்டமாக உயர்ந்த தளத்தில் இருந்து குதிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு பல ரசிகர்களிடம் புகழடைந்து இருக்கிறது.

ஃபோர்ட்நைட்

ஃபோர்ட்நைட்

பப்ஜி விளையாட்டு ஃபோர்ட்நைட் போன்றே மிகவும் ஒத்துப்போவதாக உள்ளது. இருப்பினும் ஃபோர்ட்நைட் சில முறையில் வித்தியாசமானதாக உள்ளது. இந்த விளையாட்டில் 100 வீரர்கள் போர்க்களத்தில் குதித்து பிறரை எதிர்த்து சண்டையிட வேண்டும். இந்த விளையாட்டில் கடைசி வரை யார் விளையாடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறது.

பேட்டில்லேண்ட் ராயல்

பேட்டில்லேண்ட் ராயல்

இந்த விளையாட்டு சற்றே வித்தியாசமாக உள்ளது. இது ஒரு மூன்றாம் நபர் போர் விளையாட்டாகும். இந்த விளையாட்டில் 32 வீரர்கள் களமிறங்கள் தொடர்ந்து மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் போரிட வேண்டும். இந்த விளையாட்டானது பப்ஜியோடு ஒப்பிடும்போது சற்று வன்முறை அதிகம் கொண்டதாக இருக்கிறது என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Pubg Banned in India Here the List of Best Pubg Replacable Game

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X