மோடிராக்ஸ் சீனாஅதிர்ச்சி:டுவிட்டரில் அனல் பறக்கும் ஹேஸ்டேக். 14 பில்லியன் டாலர்கள் இழப்பு

|

இந்திய அரசு பப்ஜியை தடை செய்த அடுத்தப்படியே டென்சென்ட் சந்தை மதிப்பில் 14 பில்லியன் டாலர்கள் இழந்துள்ளது. பப்ஜியை இந்தியாவில் தடை செய்துள்ளதாக புதன்கிழமை அறிவித்த அடுத்தநாளே டென்சென்ட் அதன் பங்குகளில் 2% சரிந்தன.

175 மில்லியன் அளவு பயனர்கள்

175 மில்லியன் அளவு பயனர்கள்

ஆரம்பத்தில் தென் கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பப்ஜி, சீனாவில் மிகப்பெரிய கேமிங் நிறுவனங்களில் ஒன்றான டென்சென்ட் சீனா, பிற சந்தைகளின் விரிவாக்கத் திட்டத்தின்படியாக பப்ஜி மொபைல் பதிப்பை வாங்கியது. உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியா, பப்ஜியில் அதிக பயனர்களை கொண்ட நாடாக உள்ளது. பப்ஜி இந்தியாவில் 175 மில்லியன் அளவு பயனர்களை கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

118 செயலிகளுக்கு தடை

118 செயலிகளுக்கு தடை

பிரபல விளையாட்டுகளில் ஒன்றான பப்ஜி உட்பட 118 செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில் டென்செண்ட் பங்குகள் 2.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்காரணமாக அதன் சந்தை மதிப்பில் 14 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டுவிட்டரில் ஹேஸ்டேக்

டுவிட்டரில் ஹேஸ்டேக்

இதையடுத்து டுவிட்டரில் #ModiRocksChinaShocked என டுவிட் செய்து தங்களது மகிழ்ச்சியை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். பப்ஜி தடை பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ஏணையோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறப்படுகிறது.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Google எச்சரிக்கை! இந்த 6 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்! மீண்டும் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்!Google எச்சரிக்கை! இந்த 6 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்! மீண்டும் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்!

உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு

உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு

இதையடுத்து உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா சீனா பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த செயலிகள் மூலம் பின்வாசல் வழியாக சீனா இந்தியாவுக்குள்ளான தகவல் தொடர்பை துண்டிக்க முயலும் எனவும் கூறப்பட்டது.

130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பு

130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பு

இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு சீன செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.

59 சீன செயலிகளுக்கு தடை

59 சீன செயலிகளுக்கு தடை

இதையடுத்து டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. அடுத்தக்கட்டமாக போட்டோ எடிட்டர் ஏர்பஷ், மெய்பய், பாக்ஸ்கேம் உள்ளிட்ட 15 செயலிகளுக்கு தடை விதித்து அறிவித்த அடுத்த சிலநாட்களிலேயே பிரபல விளையாட்டான PUBG உட்பட 118 சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்து அறிவித்தது.

முறையற்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை

முறையற்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை

டிக்டாக், பப்ஜி தடை இந்தியாவில் பலரையும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது என்றே கூறும் வகையில் சமூகவலைதளங்களில் மீம்கள் பறக்கவிட்டு வருகின்றனர். அதேபோல் இந்தியாவைத் தொடர்ந்து வேறுசில நாடுகளும் முறையற்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Source: india.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Pubg Ban in India: Tencent Lost $14 Billion In Market Value

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X