பப்ஜி மோகம்: தட்டி கேட்ட அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்.!
நாடு முழுவதும் பப்ஜி விளையாட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும், அதன்படி உலகம் முழுவதும் இந்த விளையாட்டு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி விளையாட்டு அதிகம் கவர்ந்துள்ளது.

பப்ஜி விளையாடுவதை கண்டித்த தந்தை
மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் மிகவும் பிரபலமான மற்றும் அதிக டவுன்லோடு பெற்ற கேம் ஆப்களில் ஒன்று இந்த பப்ஜி எனப்படும் கேம். இந்த கேம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். குறிப்பாக இந்த பப்ஜி கேம் நிறுவனம் இந்தியாவில் அதன் லைட் வெர்ஷன் ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்நிலையில் பப்ஜி விளையாடுவதை கண்டித்த தந்தையை வெடிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவடத்தில் இருக்கும் காகதி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரப்பா கும்பார்(60). ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான சங்கரப்பா கும்பார் அவர்களுக்கு ரகுவீர் (21) என்ற மகன் உள்ளான். ரகுவீர் டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். குறிப்பாக செல்போன் விளையாட்டான பப்ஜி-க்கு அடிமையான ரகுவீர் எப்போதும் அதையே ஆடி வந்துள்ளார்.

விளையாடுவதற்காக பணம் தரமுடியாது
பின்பு பப்ஜி கேம் விளையாடுவதை நிறுத்துமாறு அவர் தந்தை கண்டித்துள்ளார், இதனால் இருவருக்கும் அடிக்கடிவாய்த்தகராறு நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்போன்ரீசார்ஜ்செய்வதற்கு பணம் கேட்டிருக்கிறார் ரகுவீர். பப்ஜி விளையாடுவதற்காக பணம் தரமுடியாது என்று கூறிவிட்டார்சங்கரப்பா.

இதனால் ஆத்திரமடைந்த ரகுவீர், அக்கம்பக்கத்து வீட்டு ஜன்னலை கற்களால் தாக்கி உடைத்தார். இதுபற்றிபோலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ரகுவீரை அழைத்து சென்று அறிவுறை கூறி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

தலையை துண்டாக வெட்டி வீழ்த்திவிட்டு தப்பிவிட்டார்
ஆனால் அன்று இரவும் நள்ளிரவு வரை பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த ரகுவீரை, சங்கரப்பா திட்டியதாகதெரிகிறது. மேலும் ஆத்திரமடைந்த ரகுவீர் சங்கரப்பாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர்அவர் தலையை துண்டாக வெட்டி வீழ்த்திவிட்டு தப்பிவிட்டார். பின்பு அங்கு சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சங்கரப்பா உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்பு ரகுவீரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர், அதில் தந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார் ரகுவீர்.

மறுபடியும் போலீசாரிடம் கேட்டுள்ளார்
போலீசார் விசாரணை முடிந்ததும், எனக்கு போன் வேண்டும்,நான் பப்ஜி விளையாட வேண்டும் என மறுபடியும்போலீசாரிடம் கேட்டுள்ளார் ரகுவீர்.


Click it and Unblock the Notifications