வெற்றிகரமாக 10 செயற்கைகோளையும் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ!

|

பிஎஸ்எல்வி சி49 அனைத்து (10) செயற்கைகோளையும் துல்லியமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது எனவும் இதில் பணியாற்றிய அணிக்கு வாழ்த்துகளையும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஓஎஸ்-01 உட்பட ஒன்பது சர்வதேச செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டது என தெரிவித்துள்ளது. விண்ணுக்கு ஏவப்பட்ட 15 நிமிடங்களில் இஓஎஸ்-01 செயற்கைகோள் வெற்றிகரமாக சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங்

இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங்

இஓஎஸ் நிலைநிறுத்தப்பட்டவுடன் அடுத்தடுத்த ஒன்பது செயற்கைகோள்களும் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. இஓஎஸ் நிலைநிறுத்தப்பட்டவுன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கட்டளை நெட்வொர்க் அதன் கட்டுப்பாட்டை பெற்றது.

10 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-49

10 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-49

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 10 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இஸ்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இஓஎஸ்-01 செயற்கைகோள்

இஓஎஸ்-01 செயற்கைகோள்

இதில் இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 செயற்கைகோள் முதன்மையாக பொருத்தப்பட்டது. இது விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு உள்ளிட்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோளாக இருக்கும்.

4 வீரர்களுடன் விண்ணுக்கு பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்: இது ஒரு புதிய சகாப்தம்- பாராட்டும் தலைவர்கள்4 வீரர்களுடன் விண்ணுக்கு பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்: இது ஒரு புதிய சகாப்தம்- பாராட்டும் தலைவர்கள்

அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்கள்

அதோடு லிதுவேனியா நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப சம்பந்தமான ஒரு செயற்கைகோள், அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்கள், லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த கடல்சார் பயன்பாடுக்கு 4 செயற்கைகோள்கள் என மொத்தமாக 10 செயற்கைகோள்கள் இதில் பொருத்தப்பட்டது.

மழைப் பொழிவு காரணமாக 10 நிமிடம் தாமதம்

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டன் தொடங்கப்பட்ட 26 மணிநேரத்துக்கு பிறகு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் மழைப் பொழிவு காரணமாக 10 நிமிடம் தாமதாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்தியாவின் 51-வது பிஎஸ்எல்வி ராக்கெட்

இந்தியாவின் 51-வது பிஎஸ்எல்வி ராக்கெட்

பிஎஸ்எல்வி சி-49 இந்தியாவின் 51-வது பிஎஸ்எல்வி ராக்கெட்டாகும். ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 செயற்கைகோளில் இருக்கும் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் அனைத்து பருவநிலையிலும் படங்களை எடுக்க முடியும்.

முதல் செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி-49

முதல் செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி-49

கொரோனா தொற்று காரணமாக இஸ்ரோ இந்த ஆண்டு திட்டமிட்ட எந்தவித செயற்கைகோளையும் விண்ணில் செலுத்தவில்லை. இந்தாண்டின் முதல் செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ தலைவர் கே.சிவன்

இஸ்ரோ தலைவர் கே.சிவன்

பிஎஸ்எல்வி சி49 அனைத்து (10) செயற்கைகோளையும் துல்லியமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது எனவும் இதில் பணியாற்றிய அணிக்கு வாழ்த்துகளையும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார். சந்திரயான் 3, ககன்யான் மிஷன் என அடுத்தடுத்து பல திட்டங்களை இஸ்ரோ வரிசையாக மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
PSLV C-49 Successfully Launches 10 Satellites into Orbit

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X